இளமை புதுமை

அசத்தும் அலங்காரம்: கெட்டப்பை மாத்துங்க!

மிது கார்த்தி

லங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இந்தியா முழுமையாக வென்றது. ஆனாலும், தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்காக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கொடுத்த வாய்ஸ் கிரிக்கெட் வீரர்கள் பலரையும் நிச்சயம் நெளிய செய்திருக்கும்.

pandya

இலங்கைக்கு எதிரான போட்டியில் ரகானே, கேதார் ஜாதவ், புவனேஸ்குமார் போன்ற வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. மோசமாகவோ சுமாராகவோ விளையாடிய கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது.

இந்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க, விராட் கோலியைப் போல சிகை அலங்காரத்தையும், உடலில் டாட்டு குத்திக்கொள்வதும்தான் காரணம் என சுனில் கவாஸ்கர் நினைத்தாரோ என்னவோ. ‘தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் வித்தியாசமான சிகை அலங்காரத்தையும் உடலில் டாட்டூவும் குத்திக்கொள்ள தொடங்கினால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று விராட் கோலியை கிண்டல் அடித்தார் கவாஸ்கர்.

தற்போதிய அணியில் உள்ள வீரர்களில் முன்பு வித்தியாசமான சிகை அலங்காரத்தில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி வந்திருக்கிறார். ஆனால், டோனியைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வித்தியாசமான சிகை அலங்காரம் மட்டுமின்றி, உடலில் இஷ்டப்படி டாட்டூ குத்திக்கொள்வதையும் கோலி வழக்கமாக்கிகொண்டிருக்கிறார்.

rahul and pandyaright

தலைவன் எவ்வழியோ வீரர்களும் அந்த வழி என்பதைப்போல், இளம் வீரர்கள் பலரும் கோலியைப் போலவே சிகை அலங்காரம், டாட்டூ குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நம் வீரர்களின் சிகை அலங்காரம் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக ஈர்க்கிறது!

SCROLL FOR NEXT