இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக்கில் ரீல்ஸ்களைப் பார்க்கவே தனிக்கூட்டம் உருவாகிவிட்டது. குறிப்பாக அதன் மூலம் கிடைக்கும் லைக்ஸ், கமென்ட்ஸ், வியூஸ், ஷேரிங்கிற்காக ரீல்ஸ் பதிவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
இன்ஸ்டகிராமில் அதிலிருந்து வருவாயும் ஈட்ட முடியும் என்பதால், ரீல்ஸ் பதிவுகள் எகிறியவண்ணம் உள்ளன. குறிப்பாக வித்தியாசமான ரீல்ஸ்கள்தான் பேசப்படும் என்பதால், அதற்காக எந்த எல்லையையும் தாண்டும் அளவுக்கு இந்தக் காலத் தலைமுறையினர் மாறிவிட்டனர்.
அதற்கு உதாரணமாக டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் இடுப்பில் துண்டும் மேலே பனியனுமாகப் பயணித்துள்ளார். எந்தக் கூச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக மெட்ரோ ரயிலுக்குள் அவர் நடந்து செல்வதை அவருடைய நண்பர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த இளைஞரைப் பார்த்து இளம் பெண்களை சிரிப்பதையும் வீடியோவாக்கி அதை ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். ரீல்ஸுக்காக சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் மெட்ரோவில் நடனமாடிய இளம் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோன்றவர்களை என்னதான் செய்வது?