ஸ்டைல் என்பதும் ஒரு வகையில் நம்மைத் தூய்மைப்படுத்திக் காட்டுவதுதான் என்கிறார்கள், உலகின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள். சர்வதேச மேடைகளில் ஃபேஷன் ஷோ நடத்திய பாப்புலர் டிசைனர்கள் முன்னிலையில் கடந்த வாரம் சென்னையில் ஒரு சர்வதேச ஃபேஷன் திருவிழா நடைபெற்றது. கிங் பிஷர்ஸ் நிறுவனம் சார்பில் நடந்த இந்த ஃபேஷன் வீக் நிகழ்ச்சியின் ஹைலைட் ‘சீஸன் டிரெஸிங்’தான்.
ராயல் ரெட்
இந்நிகழ்ச்சியில் டிசைனர் ஜூலியின் வடிவ மைப்பில் மாடல்கள் அணிந்துவந்த ஆடைகளில் பலவற்றில் ராயல் ரெட் கலர் அதிகமாகப் பளபளத்தது. முழுக்க லேட்டஸ்ட் ஆட்டம் வின்டர் கலெக் ஷன்ஸ் அசத்தலாக இருந்தது. அழகும், கவர்ச்சியும் மிளிர்ந்த இந்த ராம்ப் வாக் ஷோவின் ஷோ ஸ்டாப்பராக நடிகை நந்திதா இருந்தார்.
வொயிட் லுக்
கொச்சின் காஸ்டியூம் டிசைனர் ஹரி ஆனந்த் டிசைனிங் ‘ஒயிட் லுக்’ கை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கேரளாவின் ஸ்பெஷல் டிசைனிங் இது. இந்த ஷோவில் எலிமெண்ட்ஸ் ஜூவல்லரி, பிரைடல் லுக் கலெக் ஷன் இப்படி எல்லாமே டாப் லெவல். ஒரு கனவு, மேடையில் நடந்து வருவதைப்போல உணர்ந்ததாக ஷோ ஸ்டாப்பர் ஹிமாங்கனி சிங் அந்தச் சுற்றின் முடிவில் கூறினார்.
23 ஸ்டார்ஸ் ஃபெஸ்டிவல்
நியூயார்க் டிசைனர் சஞ்சனாவின் ஷோ குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஷோ வாக இருந்தது. அதற்காகவே மாடல்கள் அனைவரும் லைட் கலர்ஸ் டிசைனிங் பயன்படுத்தி இருந்தார்கள். இந்த ஷோவில் நடிகைகள் குஷ்பு, பிந்துமாதவி, ஐஸ் வர்யா அர்ஜூன், இனியா, தொகுப்பாளினி கீர்த்தி உள்ளிட்ட 23 நட்சத்திரங்களின் ராம்ப் வாக் செய்தனர்.
பிரைடல் பெஸ்டிவெல்
பாரம்பரிய திருமண பிரைடல் பெஸ்டிவெல் ஷோ கலெக் ஷன் ரவுண்ட் இந்த ஃபேஷன் ஷோவின் நிகழ்ச்சியின் ஸ்பெஷல். பாடகி சின்மயி, நடிகை கார்த்திகா, ரூபா மஞ்சரி ஆகியோர் வலம் வந்த இந்த ராம்ப் வாக் சுற்றில் இயற்கை மலர் டிசைன்ஸ், முஸ்லிம் பிரைடல் லுக், சாரீஸ் ரவுண்ட், அனார்கலி, லெஹங்கா டிசைனிங் என அனைத்திற்குமே பயங்கர வரவேற்பு இருந்தது.