இளமை புதுமை

தளம் புதிது: இமெயில் வரும் இணையதளங்கள்

சைபர் சிம்மன்

இணையத்தில் உலாவும்போது கண்ணில்படும் நல்ல இணையதளங்களை புக்மார்க் செய்து கொள்வது அவசியம். புக்மார்க் செய்துவைத்ததையே மறந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் புக்மார்க் செய்வது மட்டும் பலன் அளிக்காது.

எனவே தான் பலரும் பின்னர் பார்க்க வேண்டிய இணையதளங்களை அப்படியே இமெயிலில் அனுப்பிவைக்கும் வழியைக் கையாள்கின்றனர். இப்படி இணையதள முகவரிகளை இமெயிலில் அனுப்பிக்கொள்வதை எளிதாக்குகிறது பார்வேர்டி.மி இணையதளம்.

இந்தத் தளத்தில் உள்ள புக்மார்க் டூல்பாரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் அதன்பிறகு, எந்த இணையதளத்தைக் குறித்துவைத்துக்கொள்ள விரும்பினாலும், டூல்பாரில் ஒரு கிளிக் செய்தால் போதும் அந்தத் தளம் இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதற்கு உறுப்பினராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மிக எளிதான ஆனால் பயனுள்ள சேவை. குரோம் நீட்டிப்பாக செயல்படும் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி:>https://fwrdto.me/

SCROLL FOR NEXT