இளமை புதுமை

பால் வெளிப் படம்

செய்திப்பிரிவு

புகைப்படங்கள் எடுப்பதில் இப்போது எல்லோருக்குமே ஆர்வம்தான். அதற்குத் தகுந்தாற்போல் நம் கைபேசியின் மூலம் நீல வானம், கடல், சாலைகள், தோட்டத்துப் பூக்கள் என விதவிதமான படங்களை எடுக்க முடியும். நாம் எடுக்கும் இம்மாதிரியான புகைப்படங்கள் தவிர்த்து Astrophotography (வானியல் புகைப்படங்கள்) என ஒரு தனித் துறையே இருக்கிறது.

முதல் வானியல் புகைப்படம் 1840-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அலெக்ஸாண்ட்ரோ மெர்கா என்னும் வானியல் புகைப்படக் கலைஞர் பயணிகள் விமானத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டன் செல்லும் வழியில் உச்சி வானில் பறந்தபடி பால் வீதியைத் தெளிவாகப் படம் பிடித்துள்ளார். இந்தப் புகைப்படம் இணைய வெளியில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படம் எடுக்கும்போது விமானம் 36 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 600 மைல் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது.

இப்படி விமானத்தில் இருந்து புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிய காரியமல்ல. மெர்காவும் 98 படங்களை எடுத்துள்ளார். ஆனால் ஒரே ஒரு படம் தெளிவாக உள்ளது.

SCROLL FOR NEXT