இளமை புதுமை

இப்படியும் கத்துக்கலாம் இங்கிலீஷ்!

நவீன்

இன்றைய இளைஞர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது 'இங்கிலி பீச்'... ஸாரி, 'இங்கிலீஷ்'தான்! 'ரென் அண்ட் மார்டின்' முதற்கொண்டு 'ஆக்ஸ்போர்டு' அகராதியைப் புரட்டுவது வரை, ஆங்கிலம் கற்றுக்கொள்ள நம் 'பீட்டர்'கள் படும்பாடு இருக்கிறதே... அப்பப்பா. தனியாகவே ஒரு ‘ஹிஸ்டரி' எழுதலாம்.

ஆனா, இனி கவலைய விடுங்க. டூத்பேஸ்ட்டைப் பிதுக்குவதிலிருந்து, ‘மையம்' எனும் பொருள் தரும் ‘சென்டர்' எனும் ஆங்கில வார்த்தையை அமெரிக்கர்களும், பிரிட்டனைச் சேர்ந்தவர்களும் எப்படி இரு வேறு முறைகளில் எழுதுகின்றனர் என்பது உள்ளிட்ட நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள் பற்றி படம் போட்டு விளக்குகிறார் பாவினி நொராசெட்கமோல்.

SCROLL FOR NEXT