இளமை புதுமை

டிராப் பாக்ஸ் ரகசியம்

சைபர் சிம்மன்

கோப்புப் பகிர்வுச் சேவையான ‘டிராப் பாக்ஸி'ல் கோப்புகளை அனுப்பிப் பெறுவதைத் தவிரப் பல துணை அம்சங்களும் கூடுதல் வசதிகளும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று, இணையத்தில் டிராப் பாக்ஸ் மூலம் பகிரும் கோப்புகள் மீதான கருத்தறியும் வசதி. உங்கள் கோப்பின் வலது பக்க பட்டையில் பார்த்தால், பகிர்க பட்டன் கீழேயே, பின்னூட்டம் எனும் பகுதியைப் பார்க்கலாம்.

இதன் மூலம் கோப்பு தொடர்பான கருத்துகளைப் பகிரலாம். கருத்தறிய விரும்பும் நபரை பற்றிய விவரத்தை @ எனும் குறியீட்டுடன் குறிப்பிட்டால் அது தொடர்பான தகவல் அவ‌ருக்குத் தெரிவிக்கப்பட்டுக் கருத்து கோரப்படும். இதற்கு அந்த நபர் டிராப் பாக்ஸ் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

SCROLL FOR NEXT