இளமை புதுமை

வைரல் உலா: ஏழாம் மனிதனின் ஏழு அவதாரங்கள்!

மிது கார்த்தி

கிரிக்கெட் வீரர்களிலேயே சிகை அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர் யார் என்று கேட்டால், எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு எம்.எஸ்.தோனி என்று சொல்லிவிடுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 ஐபிஎல் இரண்டாம் கட்டப் போட்டிகள் செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில், புதிய கெட்டப்புக்கு மாறியிருக்கும் தோனியின் ஒளிப்படங்கள் வைரலாகியிருக்கின்றன.

புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணர் அலிம் ஹக்கிம் சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியிட்ட எம்.எஸ்.தோனியின் புதிய சிகை அலங்காரத்தைக் கண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அந்த அளவுக்கு புதிய தோற்றத்தில் ஜொலிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறார் தோனி.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது நீண்ட தலை முடியுடன் காணப்பட்ட எம்.எஸ்.தோனி, பின்னர் குட்டை முடி, மொட்டைத் தலை, மொஹாக் தலை (கவுண்டமணியார் பாணியில் கீரிப்புள்ளை தலை), ஸ்பைக் தலை,மேச்சோ தலை என விதவிதமான சிகை அலங்காரத் தோற்றங்களுக்கு மாறியிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஃபாக்ஸ்-ஹாக் என்கிற புதிய சிகை அலங்காரத்துக்கு மாறியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.

இதுநாள் வரை சிகை அலங்காரத்தில் மட்டுமே வித்தியாசம் காட்டிக்கொண்டிருந்த தோனி, தற்போது ரேஸர்-ஷார்ப் என்கிற தாடி, மீசை தோற்றத்திலும் வித்தியாசம் காட்டி புதிய கெட்டப்புக்கு மாறியிருக்கிறார். ஜூலை 7இல் பிறந்த எம்.எஸ்.தோனியின் ஜெர்சி எண் 7. தோனி இதுவரை 7 கெட்டப்களுக்கு மாறியிருக்கிறார். இந்த 7 கெட்டப் ஒளிப்படங்கள் அனைத்துமே இணையத்தில் ஹிட் அடித்துள்ளன.

SCROLL FOR NEXT