கரோனா பெருந்தொற்று வீடே உலகம் என்றாக்கிவிட்டது. கரோனாவால் பல தொழில்களும் முடங்கிவிட்டன. என்றாலும், வாய்ப்புள்ள நிறுவனங்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய கலாச்சாரத்தை அறிமுகம் செய்தன. வீட்டிலிருந்து வேலை செய்வோர், வழக்கமான பணி நேரத்திலிருந்து மாறுபட்டு வேலை செய்துவருகிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டிலிருந்தே வேலை செய்வோர், எங்கே சென்றாலும் லேப்டாப்பும் கையுமாகச் சென்றுவிடுகிறார்கள். அண்மையில் மகாராஷ்டிர பாரம்பரிய திருமணக் கோலத்தில் மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை, அந்த நேரத்திலும் லேப்டாப்பில் பணி செய்துகொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
திருமணச் சடங்குகளுக்கு மத்தியில் மாப்பிள்ளை லேப்டாப்பில் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து மணப்பெண் வியப்போடு சிரித்த காட்சியும் இணையத்தில் வலம் வந்தது. இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், ‘இதென்ன வொர்க் ஃப்ரம் வெட்டிங்கா’ என்று கிண்டலடித்துத் தள்ளினார்கள்.
அந்த வீடியோவைக் காண: https://bit.ly/2V8BDq8