கடந்த 16-ம் தேதி கனடா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மாணவியான விருத்தி பட்டேல் என்பவருக்கு இந்த ஆண்டுக்கான 'யூத் சிட்டிசன்' விருது வழங்கப்பட்டுள்ளது. வெல்லாண்ட் பெல்ஹாம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு வழங்கிய இந்த விருதைப் பெற்ற விருத்திக்கு வயது 17.
ஈஸ்ட் டேல் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கும் இவர், மூன்று இடங்களில் பகுதி நேரமாகப் பணியாற்றுகிறார். அத்துடன், 5 விளையாட்டுக் குழுக்களில் உறுப்பினராகவும், மாணவர் அமைப்புத் தலைவராகவும் செயல்படுகிறார். மேலும் பள்ளி இசைக் குழுவில் ஆர்வத்துடன் செயல்படுவதோடு கல்வியில் 96 சதவீத மதிப்பெண்களையும் பெற்று சிறந்த மாணவியாகத் திகழ்கிறார்.
உள்ளூர் வியாபாரத்தில் சாதனை, சமூகப் பணி மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகிய துறைகளில் பணியாற்றி சாதனை படைக்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.