ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வார்த்தைக்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அது தாய்மொழியின் சிறப்பு. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழகத்தின் இதர ஊர்களில் ஒரேவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டால், சென்னையில் அதே வார்த்தைக்கு வேறுவிதமாக அர்த்தம் புரிந்துகொள்ளப்படுகிறது.
இந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் 'இது தங்கிலீஷ் மாமே!' உருவாக்கியவர்கள் 'ஆசம் மச்சி' குழுவினர்!
"எல்லா ஊர்லயும் சில இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு ஒரே விதமான ஒலிப்பு முறை இருக்கும். அதே மாதிரி ஒரே அர்த்தம்தான் இருக்கும். ஆனா சென்னையில அதே வார்த்தைகளுக்கு அப்புறம் 'உ' போட்டு உச்சரிப்பாங்க. அது இந்த மண்ணோட சிறப்பு இல்லையா? அதைக் கொஞ்சம் வித்தியாசமா 'நெட்டிசன்'கள்கிட்ட கொண்டு போலாமேன்னு நினைச்சப்பதான் 'இது தங்கிலீஷ் மாமே!' ஐடியா உருவாச்சு. இப்ப இந்த ஐடியாவுக்கு செம லைக்கு" என்கிறார்கள் இந்தக் குழுவினர்.
'டிஜிட்டலி இன்ஸ்பையர்ட் மீடியா' எனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் ஒரு தயாரிப்புதான் இந்த ஐடியா. இதுபோன்ற பல மீம்கள், குறும்பு வீடியோக்கள் போன்றவற்றை அடுத்த கட்டமாகத் தயாரிக்க இருக்கிறார்கள்.
"இதுல நாங்க பயன்படுத்தி இருக்கிற சில வார்த்தைகள் எல்லாம் இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் பரவலாகப் பயன்படுத்துற வார்த்தைகள்தான். இதெல்லாம் சோஷியல் மீடியா வரலாறுல அப்லோட் பண்றது நம்ம கடமை இல்லையா?" என்று கேட்டு சிரிக்கிறார்கள்.
ஃபேக்ட்டு... ஃபேக்ட்டு!
இவர்களின் கைவண்ணத்தில் உருவான வேறு சில மீம்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: