எந்நேரமும் டி.வி. பார்த்துக்கொண்டிருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் கண்டிப்பாக எச்பிஓவில் வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தத் தொடர் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. உலக அளவில் அதிகம் காப்பியடிக்கப்பட்ட தொடர் இது என்கிறார்கள். இந்த வெற்றிகரமான தொடர் நான்கு சீஸன்களை முடித்துவிட்டுத் தனது ஐந்தாவது சீஸனைப் பார்வையாளர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.
2014-ம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று, இந்த ஐந்தாவது சீஸனின் முதல் எபிசோட் பிரீமியராக மொத்தம் 173 நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பட்டது. காப்பியடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்கள். இப்படி ஒரு ஷோ 173 நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது ஒரு உலக சாதனையாகியுள்ளது.
‘இதற்காக இந்த ஷோவுக்கு 2016-ம் ஆண்டுக்கான கின்னஸ் விருதும் கிடைத்திருக்கிறது. விருதுக்கான அதிகாரபூர்வச் சான்றிதழை இந்தத் தொடரில் ஆர்யா ஸ்டார்க் என்னும் வேடமேற்றிருக்கும் நடிகை மைஸி வில்லியம்ஸ் பெற்றுக்கொண்டார்.