ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற சோஷியல் மீடியாவின் காலம் இது. ஏதாவது ஒண்ணு நடந்தா போதும் அடுத்த நொடியே அது தொடர்பான கலாய்ப்புகள் சமூக மீடியாவை நிறைத்துவிடுகின்றன. இப்பவே இப்படி இருந்தால் நாடு விடுதலை அடைவதற்கு முன்னதாகவே இந்த இணையம் வளர்ச்சி பெற்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்போது முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஃபிளிப்கார்ட், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்ற பல தளங்கள் அந்தக் காலத்திலேயே அறிமுகமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? நினைக்கவே சுவாரசியமாக இருக்கிறதா?
இந்த எண்ணமே சுவாரசியம் தருவதால்தான் இந்த ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரத்துக்கு முன்னரே இணையம் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என யோசித்திருக்கிறது இன்1947 என்னும் விளம்பர நிறுவனம். அப்போது இந்த இணையங்களில் எல்லாம் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை மவுஸைத் தட்டி யோசித்திருக்கிறார்கள். கூகுளில் எதைத் தேடியிருப்பார்கள், யூடியூபில் எந்தப் படத்தை அதிகம் பார்த்திருப்பார்கள், அன்று ஐஆர்டிசி வெப்சைட்டில் நிலை எப்படி இருந்திருக்கும்... இப்படி ஒவ்வொன்று குறித்தும் சுவாரசியமான கிரியேடிவ் டிசைன்களை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம்.
அவற்றை வசீகரமான படங்களாகக் கொண்ட ஒரு ஆல்பத்தை உருவாக்கித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது இன்1947. இதற்கு பெருவாரியான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் இந்தப் பக்கத்தை விரும்பியதுடன் சகட்டுமேனிக்கு ஷேர் செய்து தங்கள் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அந்தப் படங்களில் சில இங்கே இடம்பெற்றிருக்கின்றன.
முழு ஆல்பத்தையும் காண: >https://goo.gl/H0auG2