விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகத்தில் செல்லும் போக்குவரத்துக்காக உலகம் காத்திருக்கிறது. ஹைப்பர்லூப் போக்குவரத்து அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ராட்சதக் குழாய்க்குள் சாலை அமைக்கப்பட்டு மின்மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வாகனங்கள் உந்தித் தள்ளும் போக்குவரத்து முறை இது.
2013-ல் அமெரிக்கரான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலன் மஸ்க் இத்திட்டத்தை கையில் எடுத்தார். இப்போது அமெரிக்காவைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு ஹைப்பர்லூப் வர உள்ளது. தொடக்கத்தில் இது முட்டாள்தனமான திட்டம் என்றவர்கள், இப்போது எலன் மஸ்க்கைப் பாராட்டி தீர்த்துவருகிறார்கள்.