இளமை புதுமை

ஒரு மொபைல் 5 கேமரா

செய்திப்பிரிவு

கே.கே

‘கண்ணும் கண்ணும் நோக்கியா..’ எனப் புகழ் பாடும் அளவுக்கு ஒரு காலத்தில் கோலோச்சியது நோக்கியா. ஆனால், ஸ்மார்ட் போன்களின் வருகை நோக்கியாவை நோக்காதவண்ணம் ஆக்கியது. தற்போது மீண்டும் களமிறங்கி நவீன தொழில்நுட்பத்துடன் நோக்கியா சில புதிய தயாரிப்புகளை வெளியிட்டுவருகிறது. அந்த வகை இளையோரைக் கவரும் வகையில், உலகில் முதன் முறையாக 5 கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.
‘நோக்கியா 9 ப்யூர்வியூ’ எனப் பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்போன் அதிநவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜ் வசதி உண்டு.

12 எம்பி திறன் கொண்ட ஐந்து கேமராக்கள், தானியங்கி ஃபோகஸ் வசதி, தொலைவில் உள்ள பிம்பத்தைத் தெளிவாகப் படம் பிடிக்க நவீன சென்சார், வைடு ஆங்கிள் வசதி என ஸ்மார்ட் போனில் கேமராவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு செல்பி பிரியர்களுக்காகப் பிரத்யேகமாக 20 எம்பி திறனில் ஒரு கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஃபேஸ் அன்லாக், நீர், தூசு புகாத பாதுகாப்பு, வலுவூட்டப்பட்ட டிஸ்பிளே எனப் போனின் பாதுகாப்பு அம்சங்களையும் கவனத்தில் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள். இதன் விலை கொஞ்சம் அதிகம். ரூ.49,999 மட்டுமே!

SCROLL FOR NEXT