ஸ்மார்ட்போன் தெரியும். ஸ்மார்ட் ஷூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘ஸ்மார்ட் ஷூ’ என்ற பெயரில் புதிய ரக ஷூ அறிமுகமாகியிருக்கிறது. ‘நைக் அடாப்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூவில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
இந்த ஷூவை அணியும்போது பாத அளவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம்முடைய பாத அளவுக்கு ஏற்றார்போல அதுவாகவே பொருந்திக் கொள்ளும். அத்தகைய ஆற்றல் இந்த ஷூவில் உள்ளது. இதேபோல குனிந்து ஷூவை மாட்ட வேண்டிய தேவையும் இல்லை. கூடைப்பந்தாட்ட வீரர்களை மனதில் வைத்து இந்த ஷூவை ‘நைக்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஷூவை அணிந்திருந்தால் அது காலில் இருக்கும் உணர்வே இருக்காதாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், விளையாடும்போது ஷூ லேஸை அடிக்கடி இறுக்கிக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், இதில் ஷூ லேஸே கிடையாது. இதுபோன்ற பல அம்சங்கள் இருப்பதால்தான் இதை ‘ஸ்மார்ட் ஷூ’ என்கிறார்கள்.