ஒரு பக்கம் முழுவதும் எழுதி அல்லது ஒரு மணி நேரம் முழுக்க பேசி ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு சிறிய கேலிச் சித்திரத்தால் ஒரு நொடியில் ஏற்படுத்த முடியும். காட்சி மொழி அத்தனை சக்தி வாய்ந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜான் ஹால்கிராஃப்ட் இத்தகைய கேலிச் சித்திரங்கள் மூலம் உலகைத் தன் பக்கம் ஈர்த்துவருபவர். பிபிசி, ரீடர்ஸ் டைஜஸ்ட், தி கார்டியன், தி ஃபினான்ஷியல் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் அவர் கேலிச் சித்திரக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அவர் வரையும் படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. 1950களில் வெளி வந்த விளம்பரங்களின் வடிவமைப்பை அடிப்படையாக வைத்து தற்காலப் போக்கைத் தனக்குக் கை வந்த கலை மூலம் புத்திசாலித்தனமாக நையாண்டி செய்து வருகிறார் ஹால்கிராஃப்ட்.
தொழில்நுட்பங்கள் நிறைந்த காலத்தில் நவீனம் என்ற பெயரில் நாம் தினந்தோறும் செய்யும் சொதப்பல்களைக் கேலி செய்யும் வகையில் அவர் வரைந்துள்ள சித்திரங்களில் சில உங்களுக்காக.