இளமை புதுமை

போரை அடிக்கணுமா?

ம.சுசித்ரா

ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து, தொடர்ச்சியாக வேலை பார்ப்பது சலிப்பூட்டும் விஷயம்தான். அட உயிரற்ற கணினியை எவ்வளவு நேரம்தான் ரொமான்ஸ் பண்ண முடியும் சொல்லுங்க? நம்மைப் போலவே பிரிட்டனில் வேலைபார்க்கும் மைக் மற்றும் பென் எனும் இரண்டு நண்பர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணியிருக்காங்க. உடனே! பளிச் என ஒரு பல்பு தலையில் எரிந்தது.

நம்மோடு ஒட்டி உறவாடும் கணினி தொழில்நுட்பம் கொண்டே நம் சலிப்பைத் தூர விரட்டலாமே எனத் தோன்றியது. அதற்காக செல்ஃபி எடுப்பது, சமூக வலைத்தளங்களில் மொக்கை போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை.

மனிதன் ஒரு சமூக விலங்குதானே. மீண்டும் இயற்கைச் சூழலில் சுகமாகச் சுற்றித் திரியும் விலங்குகளாக மாறினால் எப்படி இருக்கும் எனும் ஆவல் எழுந்தது. வெவ்வேறு மிருகங்கள் கணினித் திரையில் தோன்ற மானிட்டருக்குப் பின்னால் இவர்கள் தலையைப் பொருத்திக்கொண்டு சுவாரசியமான ஒளிப்படங்கள் எடுத்துள்ளார்கள். அட! இப்படியும் நமக்கு அடிக்கும் போரை மீண்டும் அடிக்கலாமா? அப்படியே கொஞ்சம் வேலையும் பாருங்கப்பா…

SCROLL FOR NEXT