இளமை புதுமை

காதலுக்காக ஓர் ஆல்பம்

செய்திப்பிரிவு

இசை, இளைஞர், காதல் ஆகிய மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இந்த மூன்றும் இணையும் வகையில் கணேஷ் சந்திரசேகரன் என்பவர், ‘U The Epitome of Love’ என்ற இசை ஆல்பத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். முழுமையாகக் காதலை மையமாகக் கொண்டிருப்பதால் இந்த இசை ஆல்பம் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆல்பத்தின் ஆறு பாடல்களும் ஆறு விதமான இசை வடிவங்களில் காதலை வெவ்வேறு கோணங்களைச் சொல்லும் வகையில் கணேஷ் சந்திரசேகரனால் இசை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆல்பத்தில் உள்ள ஆறு பாடல்களில் ஒரு பாடலை முன்னணிப் பாடகர் அல் ருஃபியானோடு சேர்ந்து டாக்டர் அனிருத் பாடியிருக்கிறார். விஜய் டிவி புகழ் சௌந்தர்யா, சாய் விக்னேஷ், நித்யஸ்ரீ, வைஜெயந்தி, முஹமத் ரிஸ்வான், மற்றும் திவாகர் ஆகியோரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

SCROLL FOR NEXT