இளமை புதுமை

ஒளிர ஒளிர ஓடலாம்!

பவானி மணியன்

‘வாங்க மக்களே! ‘நியான் ரன்’னில் கலந்துகிட்டு, எல்லோரும் ஒருநாள் உசேன் போல்ட் ஆகலாம்’ என அழைப்பு விடுக்கிறது ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்.!

இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம். தேதி:: செப்டம்பர் 24. நேரம்: மாலை 6.30.

அதென்ன நியான் ரன்?

மேற்கத்திய நாடுகளில் மக்கள் அனைவரையும் தங்களின் ‘பிராண்ட் ப்ரமோஷன்’ நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்ய ‘ஜாலி ரன்’ நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இதில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றிப் பங்கேற்றுப் பட்டையைக் கிளப்புவார்கள். ஓட்டத்தைத் தொடர்ந்து, இசை, நடனம் என கலாட்டாவாக நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள்.

இந்தப் புதிய டிரெண்டை, இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த ஆண்டு ‘ரேடியோ மிர்ச்சி’ அறிமுகப்படுத்தியது. அப்போது சென்னையில் நடைபெற்ற ‘நியான் ரன்’ ஓட்டத்தில் 4,500 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காக ஆசிய அளவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றிருக்கிறது மிர்ச்சி. இந்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த 3 கி.மீ நியான் ரன் ஓட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருக்கிறது.

நந்தனம் மைதானத்திற்குள்ளேயே மூன்று கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு நியான் பேண்ட், ஓட்டத்தின்போது கையில் கொண்டு செல்ல நியான் பிரம்பு போன்றவை வழங்கப்படும். அப்போது, அந்த இடமே ஒளிர்வதைப் பார்க்க வேண்டுமே! அற்புதமாக இருக்கும்!

இதுகுறித்து மிர்ச்சி தமிழ்நாடு துணைத் தலைவர் ஷ்யாம் தல்லம்ராஜூ கூறும்போது, “ஓட்டம் என்றால் 21 கி.மீ, 42 கி.மீ மராத்தான்தான் ஓட வேண்டும் என்ற எண்ணத்தைத் தகர்க்கக் கொண்டுவரப்பட்டதுதான் நியான் ரன். பள்ளி, கல்லூரி, அலுவலக வேலை முடித்துவிட்டு வருபவர்கள், வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம் என்பதற்காக, மாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஓட்டத்தின்போது அனைவருக்கும் நியான் பேண்ட் வழங்கப்படும். அதை அவர்கள் அணிந்து இரவில் ஒளிர்விட 3 கி.மீ ஓட்டத்தை நடந்தோ, ஓடியோ இந்த தூரத்தை நிறைவு செய்யலாம். இறுதியில் அனைவருக்கும் நியான் பவுடர் வழங்கப்படும். தொடர்ந்து, நியான் விளக்குகள் வெளிச்சத்தில் ‘ஜூம்பா’ பயிற்சியாளர்கள் எளிதான நடனப் பயிற்சி வழங்க, இசை, ஆட்டம் என ஒரு மணி நேரம் உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் ‘ஈக்விடாஸ் வங்கி’ எங்களுடன் கைகோக்கிறது” என்றார்.

மேலும் விவரங்களுக்கு: >http://www.eventjini.com/MirchiNeonRunSep24

SCROLL FOR NEXT