இளமை புதுமை

ஒரே வெட்டில் எட்டு துண்டு

ம.சுசித்ரா

1. உங்கள் நண்பர்களுக்கும் சேர்த்து நீங்களே டிக்கெட் வாங்கி சினிமா தியேட்டரில் படம் பார்க்கலாம் என முடிவு எடுக்கிறீர்கள். அப்போது இவற்றில் எதைச் செய்தால் செலவு கம்மியாகும். 1 நண்பரை ஒரே படத்துக்கு 2 முறை கூட்டிட்டுப் போவதா? அல்லது 2 நண்பர்களை ஒரே நேரத்தில் கூட்டிட்டுப் போவதா?

2. ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தின் 25-வது மாடியில் நின்றபடி ஒருவர் ஜன்னலைத் துடைத்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று கால் இடறி மேலிருந்து கீழே விழுகிறார். ஆனாலும் அவர் உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. எப்படி?

3. முதல் ஜாடி 32 குவளைத் தேநீர் கொள்ளுமென்றால், இரண்டாவது ஜாடி எத்தனை குவளை தேநீர் கொள்ளும்?

4. சுவை மிகுந்த சதுர வடிவிலான ஒரு பெரிய கேக் உள்ளது. நீங்கள் 3 முறை மட்டுமே வெட்டலாம். ஆனால் 8 சமமான துண்டுகள் தேவை. என்ன செய்வீர்கள்?

5. 32-ல் இருந்து 2-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?

விடைகள்: மேலே விளக்கப்படத்தில்

SCROLL FOR NEXT