இளமை புதுமை

பண மதிப்பு இழப்பு: ஒரு பயோடேட்டா

செய்திப்பிரிவு

‘ஜனவரி 1-ம் தேதிக்கு மேல் ரூபாய் நோட்டுப் பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிடும், 50 நாள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று முன்பு ஆர்ப்பாட்டமாக அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. அவர் சொன்ன 50 நாள் முடிந்து ஆறு நாளாச்சு. ஆனால், ரூபாய் நோட்டுகள் சகஜமாகக் கிடைத்த வழியைக் காணோம். ‘விடாது கருப்பை’ போலத் தொடரும் இந்தப் பிரச்சினையின் சுருக்க பயோ டேட்டா:

அதிகம் தேடப்பட்ட கருவி: ஏடிஎம்

வர்ரும், ஆனா வர்ராது: புதிய 500 ரூபாய்

அதிகம் உச்சரிக்கப்பட்ட வாக்கியம்: ஏ.டி.எம்.மில் பணம் இருக்கா?

வங்கியில் அதிகம் சொல்லப்பட்ட பதில்: 2000 ரூபாய் நோட்டுதான் இருக்கு. / 2000 ரூபாய்க்குக் கீழ வேற நோட்டு இல்லை.

கிடைத்தாலும் வெறுக்கப்பட்டது: புதிய 2000 ரூபாய்

பிடித்த பாடல்: ரோஸ் கலரு ஜிங்குச்சா பிங்கு கலரு ஜிங்குச்சா.

எல்லோருக்கும் கிடைத்த புதிய வேலை: கால நேரம் கணக்கு இல்லாமல் வரிசையில் காத்திருப்பது

சலித்துப் போன சமாளிப்பு: எல்லையில் ராணுவ வீரர்களின் சேவை

வெளிச்சத்துக்கு வந்த பின்னணி: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், ரிலையன்ஸ் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவராக 10 ஆண்டுகளுக்குப் பார்த்த வேலை.

இந்தியர்களின் மறக்க முடியாத நாள்: 8/11

- சீசர்

SCROLL FOR NEXT