இளமை புதுமை

மன உலகத்தின்ன் (வி)சித்திரங்கள்

ஆசை

தென்கொரியத் தலைநகரான சியோலைச் சேர்ந்த சர்ரியலிஸ ஓவியர்தான் ஜுன்கோ லீ. அதென்ன ‘சர்ரியலிஸம்’ என்று கேட்கிறீர்களா? நமக்குக் கொம்பு முளைப்பதுபோன்றும் இறக்கை முளைப்பது போன்றும் அல்லது ரோஜாப் பூவுக்குப் பற்கள் இருப்பது போன்றும் விசித்திரமான கனவுகள் வருமல்லவா! அது மாதிரியெல்லாம் ஓவியமாக வரைவதோ, இலக்கியமாக எழுதுவதோதான் சர்ரியலிஸம். அதாவது ஆழ்மனதின் விசித்திர வெளிப்பாடுதான் சர்ரியலிஸம்.

காலத்தைக் காட்டிக்கொண்டே கடிகாரம் ஒன்று மேசையிலிருந்து உருகி வழிவதுபோல் சல்வதோர் தலி (Salvador Dali) வரைந்த ஓவியம் இதுபோன்ற ஓவியங்களுக்கு கிளாஸிக் உதாரணம். இந்த சர்ரியலிஸப் பாணியில் அட்டகாசமான பல ஓவியங்களை ஜூன்கோ லீ வரைந்திருக்கிறார். 2016-க்கான ’உலக சித்திர விரு’தையும் சமீபத்தில் வென்றிருக்கிறார். புத்தகங்களை நம் அன்றாட வாழ்வில் தொடர்புபடுத்தி, லீ இந்த சமீபத்திய சர்ரியலிஸ ஓவியங்களை வரைந்திருக்கிறார். புத்தகத்துக்குள் இருக்கும் பிரபஞ்சத்துக்குள் விண்மீன் பிடிப்பது போன்று அவர் வரைந்திருக்கும் ஓவியம் சர்ரியலிஸப் பாணியில் மட்டுமல்லாமல் வெளி (space), காலம் இரண்டும் வளையக் கூடியவை என்பதை விளக்கும் வகையிலும் இருக்கிறது.

SCROLL FOR NEXT