இளமை புதுமை

கதவு, ஜன்னலில் செலவைக் குறைக்க வழி

செய்திப்பிரிவு

வீடு கட்டும் போது செலவைக் குறைப்பது மிக முக்கியம். சிலர் கதவு, ஜன்னல் வாங்க நிறைய செலவு செய்து பின்னர் அவதிப்படுவார்கள். கதவு, ஜன்னல் வாங்குவதில் கூட செலவை மிச்சப்படுத்தலாம்.

தேக்கு மரங்களுக்குப் பதிலாக வேம்பு, கோங்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் கதவுகளைப் பயன்படுத்தலாம். இப்போதெல்லாம் இரண்டு மெல்லிய தேக்குப் பலகைகளை இழைத்து, நடுவில் பிளைவுட்டை வைத்து விற்பனை செய்கிறார்கள். எனவே தேக்குக் கதவைத் தேடிச் செல்ல வேண்டாம். ஜன்னல்களைப் பொறுத்தவரை கண்ணாடியிலேயே போடலாம். அலுமினியச் சட்டங்களில் நிறைய ஜன்னல்கள் இப்போது விற்பனைக்கு உள்ளன. மேலும் ஜன்னலுக்காக சிமெண்டு ஜாலிகளைத் தனியே வாங்கத் தேவையில்லை. செங்கற்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டாலே அந்தத் தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இப்படிச் செய்வதன் மூலம் கதவு, ஜன்னல் வாங்க ஆகும் செலவை மிச்சப்படுத்தலாம்.

SCROLL FOR NEXT