இளமை புதுமை

செம ‘வெயிட்’டான ஆள்!

ம.சுசித்ரா

“உனக்கு ஹெட் வெயிட் அதிகம்” அப்படினு யாராவது உங்கள திட்டினா, “போ… போ… போய் முதல்ல அவதார் சிங் மவுனி கிட்ட போய் இந்தக் கேள்வியக் கேளு. அப்புறமா என்கிட்ட வந்து பேசு”னு சொல்லுங்க.

யாரு இந்த அவதார் சிங் மவுனி..? 60 வயசான இவர் கின்னஸ் புத்தகத்துல இடம்பிடிக்கப் போற சாதனையாளார். அப்படி என்ன சாதனை பண்ணாருன்னு கேக்குறீங்களா? அவரோட ஹெட் வெயிட்டுமா! வெயிட்! அவர் தலைல 45 கிலோ எடை டர்பன (தலைப்பாகை) 16 வருஷமா கட்டிட்டு இருக்கார். அந்த டர்பனோட நீளம் 13 ஒலிம்பிக் நீச்சல் குளங்களோட நீளத்திற்குச் சமமானதாம். அதாவது 645 மீட்டர். இதைக் கட்டறதுக்கே 6 மணி நேரம் பிடிக்குமாம்.

இந்த சிங் பஞ்சாப் மாநிலத்துல பாட்டியாலா டவுன்ல இருக்கார். இவருக்கு உலகிலேயே பெரிய டர்பன் கட்டுறதில் ரொம்பப் பெருமை! டர்பன் இல்லாம நடக்கும்போது பேலன்ஸ் மிஸ்ஸாகி விழப் போவாராம். இந்த டர்பனோட அவ்ளோ ஃபிட்டாய்ட்டார். இவ்வளவு வெயிட் டான டர்பன் அவருக்கு உண்மையிலேயே வெயிட்டுத்தான்!

SCROLL FOR NEXT