இளமை புதுமை

ஃபீல் பண்ண வைக்கும் புத்தகம்

ம.சுசித்ரா

உங்களை ஃபீல் பண்ணி எழுத வைக்கும் புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபீலிங்கான புத்தகமா? எமோஷனல் லவ் ஸ்டோரியா என யோசிக்கிறீங்களா? அதெல்லாம் ஒன்னும் கிடையாது.

வெங்காயம்! வெங்காயம்!

மாக்னஸ் ஃபெரியஸ் என்னும் புத்தக தயாரிப்பு நிறுவனம் ‘வெங்காய நோட்டு’ (the Onion Note) என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றமாதிரி நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும் போதும்

அது உங்களை அழவைக்கும். ஆனால் பயம் வேண்டாம். வெங்காய வாடை அடிக்காது.

கெமிஸ்ட்ரி செய்யிற வேலை

அது எப்படி நான் என் இஷ்டத்துக்கு எதைக் கிறுக்கினாலும் எனக்கு அழுகை வரும் என நீங்கள் கேட்பது புரிகிறது. வெங்காயத்தில் இருக்கும் அலைல் புரொபைல் (allyl propyl) என்னும் வேதியியல் பொருள் இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

வெங்காயம் நறுக்கும்போது இந்த வேதியியல் எண்ணெய் ஆவியாக மாறி நம் கண்களில் எப்படிக் கண்ணீர் வர வழைக்கிறதோ, அதே போலவே இந்த வெங்காய நோட்டில் பேனாவின் நுனி கீறும்போதும் கண்ணில் தண்ணீர் வரும். அதற்காக இந்த நோட்டின் பக்கங்களை நறுக்கிவிடாதீர்கள்.

இனி காதல் கடிதம் மட்டுமல்ல, கணக்கைக்கூட நீங்கள் உருகி உருகி எழுதுவீர்கள் பாருங்களேன்!

SCROLL FOR NEXT