என்னதான் வெயில் காலமா இருந்தாலும் உடையில்லாமல் சாப்பிட முடியுமா? ஆனால் லண்டனில் உள்ள த பன்யாடி என்னும் ஹோட்டலில் உடை அணியாமல் சாப்பிடலாம். என்ன சொல்றீங்கன்னு ஆச்சரியப்படுறீங்களா? உண்மைதாங்க. சாப்பிடும்போது நிம்மதியா சாப்பிடணும் இல்லையா? செயற்கையான எதுவும் இல்லாம சாப்பிடணுங்கிறதால உணவுகூட அதிகமாகச் சமைக்கப்படாமல் இயற்கைத் தன்மையுடன் தருகிறார்களாம்.
மின் விளக்குகூட இல்லை. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஹோட்டலில் உடையைக் கழற்றிவைத்துக்கொள்ளலாம். போட்டோ கீட்டோ எடுத்துப் போட்டுட்டான்னு பயப்படத் தேவையில்லை. அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அந்த உணவு மேசையில் போட்டோ எடுக்க அனுமதியில்லை. நல்லா ஃப்ரீயா சாப்பிடலாம், ஆனா கரெக்டா பணம் கொடுத்துதான் சாப்பிட முடியும். அதுவும் ஹோட்டல் போறதுக்கு முன்னாலயே ரிசர்வ் பண்ணித்தான் போக முடியுமாம். இந்த ஜூனில்தான் இந்த ஹோட்டலைத் திறந்திருக்காங்க. இதுக்கான முன்பதிவு ஏப்ரலிலேயே தொடங்கிட்டாங்களாம்.
உடையாய் ஒரு வாகனம்
யமஹா நிறுவனம் மூன்று சக்கரம் கொண்ட புதிய வாகனத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. மின்சக்தியில் இயங்கும் வாகனம் இது. குறைந்த தூரப் பயணத்துக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மழை, வெயில் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கத் தலைக்கு மேலே ஒரு மூடுதிரை போன்ற கூரை இதில் இருக்கிறது.
ஒரு குடையின் கீழே நடப்பது போன்ற பாதுகாப்புடன் இதில் பயணப்படலாமாம். இதில் நீங்கள் சென்றால் ஒரு வாகனத்தில் செல்வது போன்ற உணர்வு இருக்காதாம். ஒரு வசதியான உடையை அணிந்துசெல்வது போன்ற உணர்வு கிடைக்குமாம். கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா. இந்த வாகனத்தை ஓட்டவும் நன்றாகத்தான் இருக்கும் என்றே நம்புவோம்.