இளமை புதுமை

நான் ஏன் இளமை புதுமை வாசிக்கிறேன்?

செய்திப்பிரிவு


ezhiljpgஒரு விளையாட்டு வீராங்கனையாக ‘இளமை புதுமை’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். விளையாட்டுச் செய்திகளை அதிகம் தாங்கிவருவதே இதற்குக் காரணம். கவனம் பெற்ற விளையாட்டுக்கு மட்டுமே பல ஊடகங்கள் கவனம் கொடுத்துவரும் நிலையில், தடகளம் உள்பட பிரபலமாகாத விளையாட்டு தொடர்பான கட்டுரைகளை ‘இளமை புதுமை’யில் மட்டுமே தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது.

அத்துடன் தன்னம்பிக்கை சார்ந்த வெற்றிக் கட்டுரைகள் வெளியாவது பாராட்டத்தக்கது.  இணைய உலகம் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் வேளையில், அது தொடர்பாக வெளியாகும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.

- எழிலரசி, பாரா. துப்பாக்கிச் சுடும் வீராங்கனை


எனக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழ் ரொம்ப ஸ்பெஷல்.

யூடியூப் நடிகர்களின் நடிப்பைப் பற்றிய செய்தியை பல ஊடகங்கள் வெளியிட்டுப் பார்த்திருக்கேன். ஆனால், யூடியூப் சேனல் பற்றி புரொபைல் வெளியிட்டது ‘இளமை புதுமை’ மட்டும்தான். முதன்முறையாக நான் இயக்கிய வீடியோ பற்றி செய்தி வெளியிட்டதும் அதுதான்.

எல்லா தரப்பு இளைஞர்களுக்கும் ஏற்ற இணைப்பிதழாக ‘இளமை புதுமை’ இருக்கிறது. இளைஞர்களின் ரசனைக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களது விருப்பங்களையும் கேட்டு வெளியிடுவது வரவேற்கக்கூடியது. ‘அனுபவம்  புதுமை’, ‘இளமை நெட்’  ஆகிய தொடர்கள் எனக்கு ரொம்பப் பிடித்தவை. இந்த இரு தொடர்களையும் எப்பவும் தவறவிட்டதில்லை.

- அன்பு தாசன். நடிகர், ‘பிளாக் ஷீப்’ யூடியூப் சேனல்.

இளமை புதுமை’யில் வாசகர்கள் விரும்பிய மாற்றங்கள்

‘இளமை புதுமை’ இணைப்பிதழை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுப்பியிருந்தார்கள்.  ‘இளமை புதுமை’யில் வெளியாகும் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், சமூக ஊடகப் பதிவுகள், உலக விநோத நிகழ்வுகள், இணைய உலகம், சாதனை இளைஞர்கள் போன்ற படைப்புகளைத் தங்கள் விருப்பமாகப் பெரும்பாலான வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தொடர்களில் ‘வெல்லு வதோ இளமை’, ’அனுபவம் புதுமை’, ‘வாட்ஸ்அப் கலக்கல்’, ‘இளமை நெட்’, ‘பிரேக் அப் பாடங்கள்’ போன்ற பகுதிகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. வாசகர்கள் படைப்பான ‘பேசும் படம்’, மூளைக்கு வேலை தரும் ‘கண்டபடி கண்டுபிடி’ போன்ற பகுதிகளும் வாசகர்களை ஈர்த்திருக்கின்றன.

விபரீதமாகும் இளமைக் கொண்டாட்டம், இளம் பெண் களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான செயலிகள், உற்சாகம் தரும் புதிய கண்டுபிடிப்புகள், பதின்பருவப் பிரச்சினைகள் போன்ற அம்சங்களை மையப்படுத்தி எழுதும்படி வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மீம்ஸ்களை நிறுத்தக் கூடாது என்று சிலர் அன்புக் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். மூளைக்கு வேலை தரும் சுடோகு, புதிர்கள், குறுக்கெழுத்துப் புதிர் போன்ற பகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டுள்ளோம். அடுத்து வரும் வாரங்களில் ‘இளமை புதுமை’யைப் புது மெருகுடன் படைக்கத் தயாராகிவருகிறோம்.

SCROLL FOR NEXT