ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு சீசனுக்கும் பேஷன் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஆண்டில் பலவிதமான டிரெண்டுகளையும் ஸ்டைல்களையும் பேஷனாகப் பார்த்துவிட்டோம். இதே மாதிரி பல புதிய பேஷன் டிரெண்டுகள் வர காத்திருக்கின்றன. அடுத்து வரவிருக்கும் புதிய பேஷன் டிரெண்டுகளை இப்போதே தெரிந்துகொண்டு காலேஜ் கேம்பஸைக் கலக்கலாம் வாருங்கள்.
புதிய டிஜிட்டல் அழகியல் (New digital Aesthetic)
டிஜிட்டல் கலையை அப்படியே ஆடையில் கொண்டு வருவதற்கு இந்த ‘புதிய டிஜிட்டல் அழகியல்’ தொழில்நுட்பம் உதவும். இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் டிசைனர் தன் முழுப் படைப்பாற்றலையும் பயன்படுத்த முடியும். இனிமேல் வரவிருக்கும் புதிய டிரெண்டில் ‘புதிய டிஜிட்டல் அழகியல்’முக்கியமானதாக இருக்கும்.
நிலையான பேஷன் (Sustainable fashion)
மார்க்கெட்டில் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று சூழல், சமூக விளைவுகளை ஏற்படுத்தும் டிரெண்டை நிலையான பேஷன் என்று சொல்வார்கள். சூழலுக்கு ஏற்ற வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் காலத்திற்கு ஏற்ற வகையில் டிசைன் செய்ய இருப்பதால் இந்த டிரெண்டிற்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.
நியோ ஜியோ: ஜெனரிக் ஸ்டைல் மற்றும் நிறம்
வரவிருக்கும் டிரெண்டில் முடிவடையாத ஓரங்கள் கொண்ட ஆடைகள், லினன் பேப்ரிக், பாரம்பரிய தாக்கத்தைக் கொண்ட ஆடைகள், மொசைக் பிரின்ட்ஸ், ஹேண்ட் க்ராஃப்ட் ஆடைகள், வடிவமைப்பு டிசைன்கள் போன்றவை பிரதானமாக இருக்கும். 2014-15ல் பேஷன் உலகைக் கலக்கப்போகும் கலர்கள் சாக் வெள்ளை, சிவப்பு, நேவி, ஆக்கர் மற்றும் பச்சை.
இளைஞிகள் பேஷன்
இளம் பெண்களுக்கான 2014-15 டிரெண்டில் வலம் வரப்போவது மேக்ஸி, லாங் அண்ட் ஃப்ளேர் ஸ்கர்ட்கள், பெலஸோ பேண்ட்கள், லூஸ் ஜாக்கெட்கள், ஃபிட்டட் டாப்கள் (ஸ்லிம் ஃபிட் கிடையாது). நகைகளைப் பொறுத்தவரை, பேப்பர் குவில்ட் மற்றும் பிளாஸ்டிக் நகைகள்தான் அடுத்த ஆண்டின் டிரண்டு. பிரின்ட் மற்றும் பேட்டர்ன்களைப் பொறுத்தவரை, ஃப்ளோரல் பிரின்ட்ஸ், கேமஃப்ளேக், ஜங்கிள் பிரின்ட்ஸ், பட்டர்ஃப்ளை விங்க்ஸ், பேரட் ஃபெதர்ஸ், ஆம்பர் பிரின்ட்ஸ், போட்டானிக்கல் பிரின்ட்ஸ் போன்றவை டிரெண்டாக இருக்கும். இதில் கேமஃப்ளேக்கும், ஜங்கிள் பிரின்ட்ஸும் கூடுதல் கவனம் பெறும். இளம்பெண்களின் இப்போதைய டிரெண்டாக இருக்கும் கலர் லெமன் மஞ்சள். அடுத்த வரவிருக்கும் டிரண்டு நிறம் பெரும்பாலும் நீலமாக இருக்கும்.
இளைஞர்கள் பேஷன்
மைல்ட் பிரின்ட் சட்டைகள், பார்ஸ்லே பிரின்ட், ஜியாமெட்ரிக்கல் பிரின்ட், பாரம்பரிய பிரின்ட், ஃப்ளோரல் பிரின்ட், ரெட்ரோ ஜியாமெட்ரிக்கல் பிரின்ட், பிளாங்கட் ஸ்ட்ரைப்புகள் போன்றவை இளைஞர்களுக்கான அடுத்த ஆண்டின் பேஷன் டிரெண்டாக இருக்கும். ஓவர் கோட்களைப் பொறுத்தவரை ஸ்போர்ட் கோட், லெதர் ஜாக்கெட், காஷுவல் கோட் போன்றவை அடுத்த ஆண்டின் டிரெண்டாக இருக்கும். மல்ட்டி ஃபங்கஷ்ன் வாட்சுகள், கிராப்ட் பெல்ட்கள், கூல் கலர் கூலிங் கிளாஸ்கள் போன்றவை 2014-15ன் டிரெண்டாக இருக்கும்.
- கட்டுரையாளர்,
பேஷன் ஆலோசகர்