இளமை புதுமை

யார் அடுத்த மைக்கேல் ஜாக்ஸன்?

குமார்

மைக்கேல் ஜாக்ஸனோட மூன் வாக்குக்கு இப்பவும் உலகமே அடிமை. சென்னையில இருந்து சின்னாளப்பட்டி வரை எம்.ஜேவோட பேரு ரொம்ப ஃபேமஸ். வெஸ்டர்ன் மியூசிக் ஒரு வகையில அவர் மூலமாகத்தான் எல்லோருக்கும் பரவலாகத் தெரிஞ்சதுன்னு சொல்லலாம். அவருக்குப் பின்னாடி, அவரளவுக்கு இல்லைனாலும் நிறைய பேர் ஆட்டம் போட்டுக்கிட்டுதான் இருக்காங்க.

அதுல ஒருத்தர்தான் இந்த புரூனோ மார்ஸ். பியனோ, கித்தார், பாட்டு, டான்ஸ்னு பட்டயக் கிளப்பிட்டு இருக்கார் புரூனோ. எம்.ஜேக்கு அடுத்து இவருக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம். Doo-Wops & Hooligans, Unorthodox Jukebox அப்படினு ரெண்டே ரெண்டு ஸ்டுடியோ ஆல்பம்தான் போட்டிருக்கார். ரெண்டும் பல லட்சம் வித்துத் தீர்ந்திடுச்சு. மூணாவது ஆல்பத்துக்கு புக்கிங் போய்ட்டு இருக்கு.

புரூனோவோட குரல்லயும் ஆட்டத்திலும் எம்.ஜேவோட அதே எனர்ஜி தெறிக்குது. லாஸ் வேகாஸ்ல போன வருஷம் நடந்த iHeartRadio Music Festival 2013 வீடியோவை யுடியூப்ல போட்டுப்பாருங்க.

Locked Out Of Heaven பாட்டையும் கேட்டுப் பாருங்க. அம்புட்டும் யூத்ஃபுல்! மெலடிலயும் புரூனோ சளைச்ச ஆள் இல்ல. Just The Way You Are என்ற லேட்டஸ்ட் மெலடி கோடி கணக்குல லைக்ஸ் அள்ளி இருக்கு. இப்ப ஃபேஸ்புக்குல, ட்விட்டர்ல எங்க பார்த்தாலும் புரூனோ புரூனோ புரூனோதான், அடுத்த மைக்கேல் ஜாக்ஸன் அவர்தான்னு சொல்றாங்க.

சூப்பர்ஸ்டார் ஆகுறதுன்னா அவ்வளவு ஈசியா என்ன? யெஸ், அதுக்கும் போட்டி இல்லாமலா. ஜஸ்டீன் பீபர், ஐ எம் த கிங் ஆஃப் மியூசிக் வோர்ல்டுங்கிறார். இவரும் ஒரு டான்ஸர். ஆனா, நான்தான் அடுத்த எம்.ஜேன்னு யார்கிட்டயும் இவர் சர்டிபிகேட் எல்லாம் கேக்கல. அவரே சொந்தமா சிந்திச்சு, ஒரு முடிவுக்கு வந்துட்டார். அது ஷார்ட்கட் மாதிரித்தான் இருக்கு.

எங்க போனாலும் எம்.ஜே. மாதிரியே டிரெஸ் பண்ணிக்கிறது; முகமுடி போட்டுக்குறதுன்னு அலப்பற பண்றார் (தாங்க முடியலப்பா!). அதாவது, நம்ம பவர் ஸ்டார் மாதிரி. இந்தப் போட்டில ரெண்டு பேரும் மட்டுமில்ல. ஜோனெல் மானே, பியான்ஸே நோல்ஸ் அப்டி இப்டினு ஏகப்பட்ட போட்டி.

ஆனால், புரூனோதான் அடுத்த மைக்கேல் ஜாக்ஸன் அப்படினு யூத்ஸெல்லாம் அடிச்சுச் சொல்றாங்க. சும்மா இல்ல, அதுக்கு ரீசன்ஸும் லிஸ்ட் பண்றாங்க புரூனோவோட ஃபேன்ஸ்.

எப்படின்னா புரூனோ குடும்பமும் மைக்கேல் ஜாக்ஸன் குடும்பம் மாதிரி இசைக் குடும்பம். அப்பா, அம்மா, அண்ணன்கள் எல்லோரும் பேண்ட் குரூப்ல இருக்காங்க. அதுபோல புரூனோவோட அப்பா உக்ரைன்; அம்மா பிலிப்பைன்ஸ்னு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவங்க. எம்.ஜேவோட அப்பா, அம்மா அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவங்க.

ரெண்டு பேரும் பிளாக். உருவ ஒற்றுமையும் இருக்கு. அதுபோல ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான வாய்ஸ். அப்புறம் 24 வயதுக்குள்ள புரூனோ வாங்கிக் குவிச்சிருக்கிற அவார்ட்ஸூம் எம்.ஜே. போலதான்.

புரூனோவோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி அவருக்கான லிரிக்ஸை அவரே எழுதிக்குவார். Talking To The Moon பாட்டுல ஒரு வரி ‘மூன் வாக்’ எம்.ஜேவை ஞாபகப்படுத்துது “நான் நிலவோட பேசுறேன். எல்லாம் என்னைப் பைத்தியக்காரன்னு நினைக்கிறாங்க. ஆனால், நான் நிலவோட பேசுறேன்.”

SCROLL FOR NEXT