இளமை புதுமை

அம்பலம் ஏறும் அரட்டைகள்!

கிருத்திகா முருகேசன்

இன்றைய உலகில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பொது இடத்திலும் சரி; வீட்டிலும் சரி வாட்ஸ்அப்பில் அரட்டையில் மூழ்குவது பலருக்கும் பொழுதுபோக்காக மாறிவிட்டது. குறிப்பாகப் பிடித்தமானவர்கள் என்றால், நேரம் காலம் பார்க்காமல் அரட்டையைத் தொடர்வோர் அநேகம்.

இது ஒரு புறம் இருக்க, வாட்ஸ்அப் செயலியும் தங்களுடைய வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த பல அம்சங்களைத் தொடர்ந்து புகுத்திவருகிறது. அவற்றை உடனுக்குடன் அப்டேட் செய்து அரட்டையை மேலும் சுவாரசியமாக்குவோரும் உண்டு. இதுபோல சுவாரசியத்தை விரும்புவோருக்கு புதிய அனுபவத்தை ஸாப்டேல்ஸ் (zapptales) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வாட்ஸ்அப்பில் பிடித்தமானவர்களுடன் பல நாட்களாக அடித்த அரட்டை, ஒளிப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைத் தனிப் புத்தகமாக அச்சிட்டுக் கொள்ளும் வசதியை ஸாப்டேல்ஸ் வழங்குகிறது. இந்த இணையதளத்தில் பிடித்தமானவர்களுடன் அடித்த அரட்டையைப் பதிவிறக்கம்செய்து நம் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகமாக வடிவமைத்துகொள்ளலாம். பிடித்தமானவர்களுக்கு வித்தியாசமாகவும் மறக்க முடியாத வண்ணமும் பரிசு தர விரும்புவோருக்கு இது சரியான தேர்வு.

SCROLL FOR NEXT