1. எந்த மாதம் 28 நாட்கள் கொண்டது?
2. இருபது அடுக்கு மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்டிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்து உயிர் பிழைத்து கொண்டது. எப்படி?
3. ஒரு கூடையில் 6 முட்டைகள் இருக்கின்றன. 6 நபர்கள் ஒருவருக்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்கின்றனர். அனைவரும் முட்டைகளை எடுத்துக் கொண்ட பின்பும் கூடையில் ஒரு முட்டை இருக்கிறது. எப்படி?
4. மூன்று பெட்டிகள் இருக்கின்றன. முதல் பெட்டியில் ஆப்பிள், இரண்டாவதில் ஆரஞ்சு, மூன்றாவதில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு என ஓவ்வொரு பெட்டியிலும் லேபிள்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், மூன்று லேபிள்களும் தவறாக ஒட்டப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு முறை மட்டும் ஒரு பெட்டியை திறந்து பார்க்கலாம். ஆனால், மூன்று லேபிள்களையும் சரி செய்ய வேண்டும். என்ன செய்வீர்கள்?
5. மேரியின் அம்மாவிற்கு நான்கு குழந்தைகள். முதல் குழந்தையின் பெயர் ஏப்ரல், இரண்டாவது மே, மூன்றாவது ஜுன். அப்படியானால் நான்காவது குழந்தையின் பெயர் என்ன?
பதில்கள்
1. 12 மாதங்களும் 28 நாட்கள் கொண்டவைதான்.
2. தரை தளத்தில் இருந்த வீட்டின் ஜன்னலில் இருந்துதான் குழந்தை விழுந்தது.
3. 6-வது நபர் கூடையோடு முட்டையை எடுத்துக் கொண்டார்.
4. “ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு” என லேபிள் ஒட்டப்பட்ட பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். அதில் ஆரஞ்சு அல்லது ஆப்பிள் பழம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த பெட்டியில் ஆரஞ்சு பழங்கள் இருந்தால் ஆரஞ்சு என்ற லேபிளை அதன் மீது ஒட்டி விடுங்கள். அடுத்து இதற்கு முன்பு ஆரஞ்சு என்று ஒட்டப்பட்டிருந்த பெட்டியை ஆப்பிள் என மாற்றுங்கள். இறுதியாக ஆப்பிள் லேபிளை “ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு” என மாற்றுங்கள்.
5. மேரி