இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் இணையத்தை அணுகுபவர்களின் எண்ணிக் கைக் கூடிக்கொண்டே செல்கிறது. 2018-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 43 கோடிப் பேர் மொபைல் போன் மூலம் இணையத்தை அணுகுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. இதேபோல மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களை அணுகுவோரின் எண்ணிக்கை 23 கோடியாகக் கூடியிருக்கிறது.
வைரல் பெண்கள்
இந்த ஆண்டு இந்தியாவின் வைரல் இளம் பெண், நடிகை பிரியா வாரியர்தான். தேசிய அளவில் இளையோர்களின் பார்வையை அறுவடை செய்தார் பிரியா வாரியர். இதேபோல துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த ரிஷ்லா கான் என்ற இளம் பெண் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரு சேர வைரலானார். பிரியா வாரியர் கண்ணசைவுக்காக வைரல் ஆனார் என்றால், ரிஷ்யாகான் எதற்காக வைரல் ஆனார் என்ற காரணத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பறக்கும்போதும் காதல்
உலகில் ஐம்பது பேரில் ஒருவர் தங்கள் காதலை விமானப் பயணத்தின்போது கண்டடைந்ததாக எச்எஸ்பிசி வங்கி சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 141 நாடுகளைச் சேர்ந்த 8,150 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வில், ஐம்பதில் ஒருவர் தங்கள் காதல் துணையை விமானப்பயணத்தில் முதன்முறையாகச் சந்தித்திருக்கின்றனர்.
நம்பர் ஒன் யூடியூபர் இந்தியாவின் நம்பர் ஒன் யூடியூப் சேனல் எது? 'BB Ki Vines' என்ற சேனல்தான் அது. டெல்லியைச் சேர்ந்த 23 வயதான புவன் பேம்தான் இந்த சேனலின் உரிமையாளர். பேச்சிலர் பரிதாபங்களையும் அதையொட்டிய காமெடி நிகழ்ச்சிகளையும் தினந்தோறும் வெளியிட்டு அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் இவர். இவரது சேனல் இதுவரை 86 கோடிப் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 65 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். |