இளமை புதுமை

நகங்களின் லே ட்டஸ்ட் ஃபே ஷன்

ரோஹின்

நெயில் பாலிஷின் வாசனை சிலருக்குப் பிடிக்கும். நாசியில் அதை இழுத்து நுகரும்போது கிடைக்கும் சுகத்தைச் சொல்ல முடியாது. இழுத்துப் பாருங்கள் அப்போது தெரியும் அதன் சுகம். ஆனால் இந்த வாசனை உடம்புக்கு நல்லதல்ல என்பார்கள் பெரியவர்கள். ஆனால் அதைக் காதில் போட்டுக்கொள்ள அதென்ன அலங்கார நகையா என்று கேட்டுவிட்டு நகத்துக்கு நீங்கள் நகர்ந்துவிடுவீர்களே.

நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ள எல்லாப் பெண்களுக்குமே பிடிக்கும். முன்பெல்லாம் நெயில் பாலிஷ் போட்டுக்கொண்டதே தெரியாமல் போட்டுக்கொள்வார்கள். இப்போதெல்லாம் அப்படியல்ல. பளிச்செனக் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நெயில் பாலிஷ் இட்டுக்கொள்வதைப் பெண்கள் விரும்புகிறார்கள். விதவிதமான அடர் வண்ணங்களில் அட்டகாசமான நெயில் பாலிஷ்கள் ஃபேன்ஸி ஸ்டோர்களின் கண்ணாடி அலமாரிகளை அலங்கரிக்கின்றன. அவற்றை வாங்கி வந்து நகங்களில் பூசிக்கொண்டு கல்லூரி வளாகங்களிலும், வணிக வளாகங்களிலும் நளினமான நங்கைகள் நாகரிகமாக நடமாடுகிறார்கள்.

மாடர்ன் டிரெண்ட்

கைக்கு ஒரு கலர் என்பது ஒரு காலம். ஒரு விரலுக்கு ஒரு கலர் என்பது இப்போதைய ஃபேஷன். அடிக்க வரும் அடர் வண்ணம் என யாரும் ஒதுங்கிப்போவதில்லை, அடர் சிவப்பு, நீலம், பச்சை, பிங்க் போன்ற கலர்களை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்கிறார்கள். ரூபி ரெட், ஹாட் பிங்க், பவளம் போன்ற பூச்சுகள் நகங்களை வசீகரமானதாக மாற்றும் என்று சொல்லும் இந்த

மாடர்ன் பெண்கள் ஜிகு ஜிகு எனும் மினுமினுப்புப் பூச்சுக்கு மட்டும் ‘நோ நோ’ என்கிறார்கள். நகங்களில் வெறும் பாலிஷை மட்டும் போடுவதைவிட அதை அழகாக அலங்கரிப்பதும் இப்போது பரவலான பழக்கமாக உள்ளது. ரம்மியமான பூக்கள் கொண்ட டிஸைனை நகங்களில் வரைந்துகொள்ளும்போது விரல்கள் எடுப்பான தோற்றத்தைப் பெறும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்.

நீளமான நகங்களை விரும்புவோர் அதை வளர்க்க வேண்டிய அவசியம்கூட இல்லை. இப்போது நகங்களுக்கான எக்ஸ்டென்ஷன்கள் கிடைக்கின்றன. இதை வாங்கி நகங்களில் பொருத்திக்கொள்ளலாம். இவற்றை அழகுபடுத்திக் கொள்வதற்கு, அக்லிரிக் பவுடர்களும் பேஸ்ட்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நீளமான நகங்களை இவற்றால் அழகுபடுத்திக் கொள்ளும்போது, அவை உண்மையான நகங்களைப் போலவே தோற்றம் தந்து, பிறரின் கவனத்தை உங்கள் நகத்தின் மீதே குவிக்கும்.

காதில் போடுவது போல சின்னச் சின்ன ஸ்டட்களை விரல் நகங்களிலேயே அணிந்துகொள்வதும் இப்போதைய ஃபேஷன். நகங்களில் சிறிய துளையிட்டு ஸ்டார் போன்ற வடிவ ஸ்டட்களையும் முத்து போன்றவற்றையும் அணிந்துகொள்கிறார்கள் மாடர்ன் மங்கைகள். உங்களுக்குத் துணிச்சலிருந்தால் அதிலேயே செயினைக்கூட அணியலாம். நகங்களைத் தாண்டி அவை தொங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு பிரத்யேகக் கவனம் தரும்.

3 டியிலும் உங்கள் நகத்தை அழகுபடுத்தலாம். உங்கள் நகங்களின் மீது சின்ன சின்ன ஸ்டட்களையும் ஸ்டோன்களையும் விதவிதமான வடிவங்களில் பொருத்திக்கொள்வதும் பழக்கமாகியுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து உங்கள் நகங்களைத் தனித்துக்காட்டும். அதே நேரம் அது உங்களுக்கு அதிக தொந்தரவு தராத வகையில் பார்த்துக்கொண்டீர்கள்

என்றால் பார்ட்டிகளுக்கோ விருந்துகளுக்கோ போகும்போது எல்லோர் பார்வையும் உங்களையே மொய்க்கும்.

SCROLL FOR NEXT