இளமை புதுமை

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 05: அலாரம் மீது கண்

ஜி.எஸ்.எஸ்

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.  காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதற்காக அலாரம் வைப்போம்.

கடிகாரம் அல்லது செல்போன் தன் கடமையில் ​சிறிதும் தவறாது அலார ஒலியை எழுப்பும். நாம்தான் திட்டமிட்டு அந்த அலாரம் ஒலிக்க வேண்டிய நேரத்தைத் தீர்மானம் செய்திருப்போம்.

ஆனால், அலாரம் ஒலித்ததும் நாம் பொதுவாக ​என்ன செய்வோம்? கரெக்ட். அந்தக் கடிகாரத்தின் தலையில் தட்டி அதை அமைதிப்படுத்திவிட்டுத் தொடர்ந்து தூங்குவோம் அல்லது அது செல்போனாக இருந்தால் ‘ஸ்னூஸ்’ செய்து அதன் ஒலியை நிறுத்திவிட்டு உறக்கத்தைத் தொடர்வோம். 

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்தக் கடிகாரத்தை அல்லது செல்போனை மிகவும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் கொஞ்சம் ​தள்ளி வைத்துக் கொள்ளலாமே. இதன்மூலம் அதை அமைதிப்படுத்திவிட்டு தொடர்ந்து தூங்க வேண்டும் என்று நினைத்தால்கூடக் கொஞ்சமாவது உடலை உயர்த்தி அசைத்துதான் கடிகாரம் அல்லது செல்போனின் அலாரத்தை நிறுத்த முடியும்.  இந்த இடைப்பட்ட நொடிகளில் நமக்கு விழிப்பு உண்டாக வாய்ப்பு உண்டு. அலாரம் வைத்த​தன் நோக்கத்தை மூளை முழுமையாக உணர்ந்துகொண்டு நாம் படுக்கையிலிருந்து முழுவதுமாக எழுந்து விடுவோம். (அதற்காக வெகு தொலைவில் கடிகாரத்தையோ செல்போனையோ வைத்து விட்டுத் ​தூங்காதீர்கள். அதன் ஒலி உங்கள் காதுகளில் விழாமலேயே போய்விடலாம்). 

இது ‘மிகவும் அருகில் இல்லாமல், மிகவும் தொலைவிலும் இல்லாமல்’ இருப்பது பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும். 

(மாற்றம் வரும்)
தொடர்புக்கு: aruncharanya@gmail.com

SCROLL FOR NEXT