இளமை புதுமை

துப்பறியும் ராம்சேகர் 15: விடை

செய்திப்பிரிவு

சூ

ப்பர் மார்க்கெட் போனதாக சொன்ன கவியன்பனை ​தீவிரமாக விசாரிக்கத் தேவையில்லை என்று ராம்சேகர் ஏன் எண்ண வேண்டும்?

மகன் கடத்தப்பட்டபோது அந்தரங்கமான தொலைபேசி உரையாடல் ஒன்றில் கவியன்பன் ஈடுபட்டிருக்கிறார். தனது முன்னாள் காதலியுடன் அவர் பேசியிருக்கிறார். சூழல் காரணமாக காவ்யாவை மட்டுமே அவர் கல்யாணம் செய்துகொள்ள நேர்ந்திருக்கிறது.

மகன் கடத்தப்பட்டபோது தான் ஒரு ​மூடிய அறைக்குள் தன் முன்னாள் காதலியுடன் பேசிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்துவதில் கவியன்பனுக்கு சங்கடம். விசாரணையில் தன் காதல் விஷயம் வெளிப்படக் கூடாது என எண்ணுகிறார். அதனால்தான் சூப்பர் மார்க்கெட் சென்றதாகப் பொய் கூறுகிறார். எதிர்பாராத வகையில் அந்தச் சூப்பர் மார்க்கெட் அன்று திறக்கப்படவில்லை என்பதை அவர் அறியவில்லை.

தொலைபேசியில் அகிலாண்டேஸ்வர் என்று பெயர் இருந்தாலும் அது பொய்யான பெயர் என்று ராம்சேகர் கருதுகிறார். அகிலாண்டேஸ்வரியின் பெயரைச் சற்றே மாற்றி அகிலாண்டேஸ்வர் என்ற பெயரில் தனது மொபைலில் பதிவு செய்திருக்கிறார்.

இதை ஊகிக்கும் ராம்சேகர் சிறுவனின் கடத்தலுக்கும் கவியன்பனுக்கும் தொடர்பு இல்லை எனக் கருதுகிறார். எனவே பிற சாத்தியங்களை முதலில் அலசலாம் என்று முடிவெடுக்கிறார்.

(நிறைவடைந்தது)

SCROLL FOR NEXT