இளமை புதுமை

புதுமை உலகம்: நோயாளியைக் கண்காணிக்கும் பேண்டேஜ்!

டி.கே

கா

யம் ஏற்பட்டால் பேண்டேஜைச் சுற்றிக்கொள்வோமே, அந்தக் காட்டன் துணி நோயாளியைக் கண்காணித்து அலர்ட் கொடுத்தால் எப்படியிருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? பிரிட்டனில் உள்ள ஸ்வான்ஸீ பல்கலைக்கழகத்தில் உள்ள லைஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இதற்காக புதுமையான பேண்டேஜ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இதன் பெயர் 5ஜி ஸ்மார்ட் பேண்டேஜ். இந்த பேண்டேஜ் என்ன செய்யும்?

நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஃபாலோ செய்யும் இந்த பேண்டேஜ், குணமாகும் தன்மையையும் துல்லியமாகக் கூறிவிடுமாம். தகவல் பரிமாற்றத்துக்காக இந்த பேண்டேஜில் நானோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வயர்லெஸ் டெக்னாலஜி முறையில் தகவல்களை பேண்டேஜ் பரிமாற்றம் செய்கிறது.

தற்போது சோதனை முறையில் உள்ள இந்த ஸ்மார்ட் பேண்டேஜை வடிவமைப்பு வசதி உள்ளிட்ட பலவிதங்களில் இன்னும் 6 மாதங்களுக்கு பரிசோதிக்கவிருக்கிறார்கள். இதற்காக 130 கோடி டாலர் செலவில் ஆய்வையும் முடுக்கிவிட்டுள்ளது இந்தப் பல்கலைக்கழகம். இந்த சோதனை மட்டும் வெற்றிபெற்றால், ஸ்மார்ட் 5ஜி பேண்டேஜ் மூலமாக நோயாளி குறித்த தகவல்களைச் சுலபமாகக் கண்டறிமுடியும். மேலும், பரிசோதனைகள் தேவையா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும் என்று பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள்.

SCROLL FOR NEXT