இந்து டாக்கீஸ்

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு சிம்ரன் நேரில் பாராட்டு!

செய்திப்பிரிவு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி. நடிகை சிம்ரன் அவரை நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அவரது பதக்கத்தை வாங்கிப் பார்த்துப் பாராட்டிய சிம்ரன், ‘உங்களின் இந்தச் சாதனை ஒரு தொடக்கம்தான். இதன்மூலம் நாட்டுக்கும் நம் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் சொந்த ஊரான கோவில்பட்டிக்குப் படப்பிடிப்புக்காக இரண்டு முறை வந்திருக்கிறேன். அடுத்த முறை நீங்கள் தங்கப் பதக்கம் வெல்லும்போது உங்களையும் ஊர் மக்களையும் சந்திக்க உங்கள் ஊருக்கே நேரில் வருவேன்” என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT