இந்து டாக்கீஸ்

ரீமேக் களத்தில் நின்று விளையாடும் ப்ரியதர்ஷன்!

செய்திப்பிரிவு

பாலிவுட்டில் 25 படங்களைக் கடந்த, தற்போதும் அங்கே மரியாதைக்குரிய ஒரு தென்னிந்திய இயக்குநர் என்றால், அவர் ப்ரியதர்ஷன். இதுவரை 25 இந்திப் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் தன்னுடைய மலையாளப் படங்களையே பாலிவுட்டுக்கு ஏற்ப மசாலா தடவி அங்கே ஹிட் கொடுப்பதில் கில்லாடி.

தற்போது சயீஃப் அலிகானை ஒரு பார்வையற்ற ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அவரை வாட்டியெடுக்கும் மர்மமான வில்லனாக அக்‌ஷய் குமாரையும் இணைத்திருக்கும் ‘கைவான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கைவான்’ படத்தைத் தன்னுடைய மலையாளப் படமான ‘ஒப்பம்’ படத்திலிருந்து ரீமேக் செய்திருக்கிறார். ப்ரியதர்ஷன் படமென்பதால் தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT