இந்து டாக்கீஸ்

மீண்டும் மலேசிய சொல்லிசை

செய்திப்பிரிவு

தமிழ் சொல்லிசை தமிழ்நாட்டில் முகிழ்வதற்கு முன்பே, மலேசியத் தமிழர்கள் பலர் அதைக் கையிலெடுத்துப் புகழ்பெற்றனர். அந்தக் கலைஞர்களின் வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருக்கிறார் கிட் சாந்தே (Kidd Santhe).

புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக நிலைபெற்றிருக்கும் இவர் தமிழிலும், அதனோடு ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளைக் கலந்தும் ராப் பாடி வருகிறார்.

இவரது பல பாடல்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டு இவர் வெளியிட்ட ‘அம்பானி மணி’ ஆல்பம் பெரிய ஹிட். தற்போது மீண்டும் இந்திய பண்பாட்டுப் பின்னணியில் இவர் இசையமைத்துப் பாடியுள்ள ‘நா வேற லெவல்’ ஆல்பம் சோனி மியூசிக் நிறுவனத்தால் சென்னையில் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்வுக்கு வந்திருந்த கிட் சாந்தே: “இந்தப் பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. நான் சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது.

அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் எனக்கு டயர் மாற்ற உதவிய அந்தத் தருணமே இந்தப் பாடலின் முழுக் கருத்தாக மாறியது.

‘நா வேற லெவல்’ என்பது என்னைப் பற்றியது அல்ல, மக்களின் ஹீரோக்களான ஆட்டோ ஓட்டுநர்கள்தான். இது அவர்களின் அர்ப்பணிப்பைப் பேசும் சொல்லிசை” என்றார்.

SCROLL FOR NEXT