காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்?
நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார்.
இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்து காதலைச் சொல்கிறார். இதை எல்லாம் ரகசிய கேமராவில் படம்பிடித்துத் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடத்தத் திட்டமிடுகிறது ஒரு கூட்டம். கற்பனைக் காதலி எப்படி வந்தார், நிஜக் காதலி என்ன ஆனார், ரியாலிட்டி ஷோ நடந்ததா என்ப தெல்லாம் மீதிக் கதை.
படம் முழுவதும் இளமைத் துள்ளலும் கலகலப்பும் இருக்கின்றன. திரைக்கதையில் வெவ்வேறு இழைகளைக் கோத்து, அவற்றுக்கிடையே சிக்கலான முடிச்சுக்களைப் போட்டுச் சுவை கூட்டி யிருக்கிறார் இயக்குநர் தனபால் பத்ம நாபன். கற்பனைக் காதலி நாயகனின் வீட்டுக்குள் வந்து அமர்வது நல்ல திருப்பம். சிங்கப்பூரின் சூழலைப் பயன்படுத்திய விதம், வசனங்கள், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் ஆகியவை படத்தின் பலம். யூகிக்கக்கூடிய காட்சிகளையும் பின்பாதியின் இழுவையையும் தவிர்த்திருக்கலாம். காட்சி கள் கலகலப்பாக இருந்தாலும் பார்வை யாளர்களைத் தம் வசம் ஈர்த்துக் கொள்ளத் தவறுகின்றன.
சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்கள் எந்தளவுக்கு நம் வீடுகளுக்குள்ளும் ஊடுருவத் துடிக்கின்றன என்கிற ஆபத்தான, புதிய விஷயத்தைத் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதைக் காட்சிப்படுத்திய விதம் அழுத்தமாக இல்லை. பார்க்கும் பெண்களிடமெல்லாம் வழிவது, காதலில் சொதப்புவது, வம்பில் மாட்டிக்கொண்டு திணறுவது, அப் பாவித்தனமாகப் பேசுவது என விளை யாட்டுப் பிள்ளைக்கான லட்சணங் களைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் பாஷா.
‘பழகுவோம், பிடித்தால் திருமணம்... பிடிக்கவில்லையா விலகுவோம்’ என்று அலட்டிக்கொள்ளாத பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். காதலிப்பது, கோபித்துக்கொண்டு போவது, திரும் பவும் வந்து காதலிப்பது தவிரப் பெரியதாக அவருக்கு இடம் இல்லை.
சிங்கப்பூர் வாழ் சீன - தமிழ்ப் பெண் ணாக நரேல் கேங்குக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் அமைந் திருக்கின்றன. சீனத்து அழகு இயல் பாக வசீகரிக்கிறது. கோபத்துடன் நாய கனைப் பின்தொடர்வது, காதல் வசப் படுவது, காதல் கைகூடுமா என்று தவிப் பது, அதிரடியாகச் சண்டை போடுவது என்று மனதில் நிற்கிறார் நரேல் கேங்.
தனது நகைச்சுவை வசனங்களால் காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறார் சதீஷ். அவருக்கு வசமாக வாய்த்திருக்கின்றன பேயோனின் பகடி வசனங்கள். ‘வீட்டுல அம்மா, அப்பா சம்பளம் கேட்குறாங்க’ என்றதற்கு, ‘ஏன்? அவங்களை வேலைக்கு வெச்சிருக்கியா?’ என்பது போன்ற வசனங்கள் கதையை உற்சாக மாக நகர்த்திச் செல்ல உதவுகின்றன. ‘உலகம் முழுவதும் அடிவாங்குறதே தமி ழனுக்கு பொழப்பா போச்சு...’ என்ப தற்கு, ‘ஆமாம், அதை வேடிக்கை பார்க் குறதும் தமிழன்தான்’ என்பதுபோன்ற சற்றே சீரியஸான வசனங்களும் உண்டு.
பாலாஜியின் வேகமான பேச்சும் நக்கலும் வழக்கம்போலக் கைகொடுத்திருக்கின்றன. ஜோ மல்லூரி, பொன்னம்பலம், கருணாகரன் ஆகியோர் தத்தமது வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்.
பேயோனின் வசனங்கள், சந்தோஷ் விஜயகுமார் பிரபாகரனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின் றன. சிங்கப்பூரைத் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு இவ்வளவு அழகாக யாரும் காட்டியதில்லை. ஜோஸ்வா ஸ்ரீதரின் இசை பரவாயில்லை. ‘நதியில் விழுந்த மலரின் பயணம்...’ கேட்க இனி மையாக இருக்கிறது. ‘நம்ம ஊரு சிங் காரி...’ ரீமிக்ஸ் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், படம் நெடுகத் தெளித்துவிட் டதுபோன்ற பாடல் காட்சிகள் எடுபடவில்லை.
கலகலப்பும் இளமைத் துள்ளலும் சிங்கப்பூர் வாசனையும் சேர்ந்து படத்தை அதன் குறைகளை மீறி ரசிக்கவைக்கின்றன.