திருமண நிச்சயதார்த்த விழா வில் இருந்து கதை தொடங்கு கிறது. சீரியல் தொடங்குகிறது என்றும் சொல்லலாம். சென்னை யில் வசிக்கும் குமார் (ஜி.வி. பிர காஷ் குமார்), ப்ரியா (நிக்கி கல்ராணி) இருவருக்கும் 2 தினங் களில் திருமணம். அதற்கு முன் தனது நண்பன் பாலாஜியை (ஆ.ஜே.பாலாஜி) அழைத்துக் கொண்டு ‘பேச்சிலர் பார்ட்டி’க் காகப் புதுச்சேரிக்கு கிளம்புகிறார் குமார்.
பார்ட்டி முடிந்து திரும்பும் போது போதை விவகாரத்தால் காவல் துறை அதிகாரி மணிமாற னிடம் (பிரகாஷ்ராஜ்) மாட்டிக் கொள்கிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க முயலும் ஓட்டம்தான் இந்தக் கதை. இதற்குள் குமாரின் முதல் காதலி நான்சியின் (ஆனந்தி) கதையும் வந்து செல்கிறது. இந்தச் சிக்கல் குமாரின் தனிப் பட்ட வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைச் சொல்லி முடிக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
கிழக்குக் கடற்கரை சாலையில் கதை வேகமெடுப்பதற்குப் பதி லாகத் தாறுமாறாகப் பயணித்து ஒருவழியாக நாம் எதிர்பார்த்த இடத்தை அடைகிறது. படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந் தாலும் பல நகைச்சுவைகள் மூன்றாம் தரமானவைதான். விட லைத்தனமான வக்கிரங்களுக்கு வசனங்களின் மூலம் தீனி போடுகிறது படம். ஆர்.ஜே.பாலாஜி சொல்லாமல் சொல்லும் கெட்ட வார்த்தைகள் படத்தை மேலும் கீழே இறக்குகின்றன. காதலுக் காக மதம் மாறுவதை பற்றி ஏதோ சொல்லப்போகிறார் என்று பார்த்தால் அதையும் உப்புக் குச் சப்பாணியாக்கிவிட்டார் இயக்குநர்.
பிரகாஷ் குமாரின் காதல் கள், காவல் துறையிடம் மாட்டிக் கொள்ளும் அவஸ்தை ஆகிய வற்றில் புதிதாகவோ சுவாரஸ்ய மாகவோ எதுவும் இல்லை. பார்ட்டியில் குத்தாட்டம், இரண்டு கதாநாயகிகளோடு பாடல், பேய் பங்களா பாடல் எனப் பாடல்களைக் கையாண்ட விதமும் பொறுமையைச் சோதிக்கின்றன. ஒரே மாதிரியாகத் தொடரும் காட்சிகள், நிக்கி கல்ராணி, ஆனந்தி இருவரின் பாத்திரங்களைப் புரியவைக்கத் தேவைக்கதிகமான காட்சிகள், பேய் பங்களா என்று படம் நீளும்போது, ‘எடிட்டர் இல்லையா குமாரு’ என்று கேட்கத் தோன்றுகிறது.
பிரகாஷ்ராஜை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச் சுவை பூசிய எதிர்மறைக் கதா பாத்திரத்தில் மின்ன வைத்திருப் பதில் வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர். மலிவாகிப்போன ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட நடப்புச் சம்பவங்களைப் படம் நெடுகிலும் கிண்டலடிப்பதில் இயக்குநரின் முத்திரையைப் பார்க்க முடிகிறது. பாலாஜியின் நறுக்கென்ற பதிலடி வசனங்கள் சில இடங்களில் ரசிக்கும்படி இருக்கின்றன.
மிகச் சுமாரான மெட்டுகள், கற்பனை வளமற்ற பின்னணி இசை ஆகியவற்றால் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மனதில் நிற்கவில்லை.
பிரகாஷ் குமார் நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கிறார். ஆனால், ஒரே மாதிரியான வேடத்தை இன்னும் எத்தனை படங்களுக்குத் தொடரப்போகி றார்? நிக்கி கல்ராணி, ஆனந்தி இருவரும் கொஞ்சமே வந்து போனாலும் அவரவர் கதாபாத் திரங்களின் குணங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் வரும் காட்சிகளை ரசிக்கலாம். ரோபோ ஷங்கர், சிங்கம் புலி இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் கூத்தடிக் கிறார்கள்.
நகைச்சுவை கலந்த காதல் கதையைச் சொல்லும் முயற்சி, மலினமான வசனங்கள், அழுத்த மில்லாத காட்சிகள், தேவை யற்ற இடைச்செருகல்கள் ஆகியவற்றால் வெகு சுமாரான முயற்சியாகச் சுருங்கிவிட்டது.