இந்து டாக்கீஸ்

சமந்தாவுக்கு ஜாக்பாட்

செய்திப்பிரிவு

கதாநாயகர்கள் பத்து அவதாரங்களில் கூட நடிப்பார்கள். ஆனால் கதாநாயகிகளுக்கு இரட்டைக் கதாபாத்திரம் அமைவதென்பது ஜாக்பாட்தான். சமீப காலத்தில் ‘பேரழகன்’ படத்தில் ஜோதிகா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘சாருலதா’ என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு அமைந்தது. தற்போது சமந்தாவுக்கு அந்த அதிர்ஷ்டம் அமைந்திருக்கிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் ‘ பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் சமந்தாவுக்கு இது இரண்டாவது இரட்டை வேட அனுபவம். விக்ரம் கே.குமார் இயக்கத்தில் தற்போது ஆந்திராவில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் ‘மனம்’ படத்தில் சமந்தாவுக்கு இரட்டை வேடங்கள். இரண்டு கதாபாத்திரங்களில் காலகட்டத்துக்கு ஏற்ப மாறுபட்ட நடிப்பைத் தந்ததில் அங்கே அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.

ஸ்பாட் லைட் தொகுப்பு: ஆர்.சி.ஜெ

SCROLL FOR NEXT