ரஜினிகாந்த் எனும் ஓர் அபூர்வ மனிதரின் பன்முகப் பயணத்தை 260 ஆச்சரியமான பக்கங்களின் வழியாக மிக நெருக்கமாகப் படம்பிடித்துக் காட்டும் அபூர்வ புகைப்படங்கள் அடங்கிய மலர் ‘சூப்பர் ஸ்டார் 45 மலர்’!
ரஜினி என்கிற காந்தத்தை ஒரு ரசிக மனோபாவத்துடன் அவரது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அணுஅணுவாக இந்த மலர் ஆராய்ந்து, ‘அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்ணாத்த’ வரையிலான ரஜினியின் 45 ஆண்டு கால திரைப் பயணத்தைக் கொண்டாடுகிறது இந்த மலர். காலத்தைக் கண்முன் நிறுத்தும் புகைப்படத் திரட்டு மட்டுமின்றி, புகழ்பெற்ற ஓவியர்களான ஏ.பி தர் மற்றும் கோபி ஓவியன் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள், யுவராஜ் கணேசன் வரைந்தளித்த இந்த மலரின் அட்டைப்பட ஓவியம், ஆகியன ரஜினியின் ரசிகர்களுக்கு பிரத்யேகமான விருந்து.
சென்னையில் 16 வயது இளைஞனாகக் கால் வைத்து, சித்தாள் வேலை செய்துவிட்டு... பெங்களூருவுக்கே திரும்பிப் போன ரஜினியால் எப்படி மீண்டும் தமிழகத்தில் கால் பதித்து சூப்பர் ஸ்டாராக உயர முடிந்தது? வெற்றிக்கதையின் அசரடிக்கும் பக்கங்களை அவரது உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் தொடங்கி, அவருடன் திரை வெளியைப் பகிர்ந்துகொண்ட முன்னணித் திரைப் பிரபலங்கள் வரை அத்தனை பேரின் பங்களிப்பையும் வாங்கித் தொடுத்துக் கொடுத்திருக்கிறது ‘தி இந்து தமிழ் திசை’யின் குழு!
‘சூப்பர் 45’ மலர் உங்களிடம் இருந்தால், ரஜினி உங்களுடன் இருக்கிறார் என்று பொருள். புத்தகக் காட்சியில் 125, 126 மற்றும் M-11 ஆகிய அரங்குகளில் 10% தள்ளுபடி விலையில் கைப்பற்றுங்கள்.