இந்து டாக்கீஸ்

கோலிவுட் ஜங்ஷன்: நயன்தாராவின் பிரகடனம்!

செய்திப்பிரிவு

நயன்தாராவின் பிரகடனம்!

நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. நாளை ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில், அதைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன்தாரா. அப்போது, அவர் அணிந்திருந்த மோதிரம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நயன்தாரா, “இது நிச்சயதார்த்த மோதிரம். எனக்குத் திருமணம் முடிவாகிவிட்டது” என்று பிரகடனம் செய்திருக்கிறார். இன்னொன்றையும் இந்த ஜோடி சாதித்திருக்கிறது. இவர்கள் வாங்கி, ரோட்டர்டேம் சர்வதேசப் படவிழாவுக்கு அனுப்பிய ‘கூழாங்கல்’ என்கிற சுயாதீனத் திரைப்படம், போட்டிப் பிரிவுக்கு தேர்வாகி, அப்படவிழாவின் உயரிய விருதான ‘டைகர் விருதை’யும் வென்று திரும்பியிருக்கிறது.

தயாரிப்பா? நடிப்பா?

பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய இரண்டு படங்களும் சூர்யாவுக்கு முக்கிய படங்களாக அமைந்தன. ஆனால், அவற்றுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி இணையவில்லை. இந்நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனத்துக்காக பாலா படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் சூர்யா நடிக்கிறாரா அல்லது தயாரிப்பாளர் மட்டும்தானா என்பது இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள் இருதரப்பிலும்.

சாப்பாடு முக்கியம்!

உள்ளூர் தொலைக்காட்சிகள் தொடங்கி பன்னாட்டு ஓடிடிக்கள் வரை, தற்போது உத்தரவாதத்துடன் ஹிட்டடிக்கும் வகையில் சேர்ந்துவிட்டன சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகள். அந்த வரிசையில் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ ஓடிடியில் இந்தியாவில் அதிகப் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ள சர்வதேச நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா சீசன் 13’. இந்த நிகழ்ச்சியைத் தற்போது தமிழிலும் வெளியிட்டு வருகிறார்கள். இதில் டைட்டிலை வெல்லும் சமையல் நிபுணருக்கு 2.5 லட்சம் டாலர் பரிசுத் தொகை காத்திருக்கிறது. இந்தியப் போட்டியாளராக இதில் கலந்துகொண்டிருப்பவர் டெல்லியைச் சேர்ந்த தேவிந்தர் சிபர். காஷ்மீர் முதல் குமரி வரை இந்திய பாரம்பரிய உணவுகளை இந்த நிகழ்ச்சியில் சமைந்து நடுவர்களை அசத்தி வருகிறார். சமையல் போட்டிகள் கிட்டத்தட்ட அழகிப்போட்டிகள் மாதிரி ஆகிவிட்டன.

மூன்று பாகங்கள்!

இரண்டரை மணி நேரத்தில் முடிக்க முடியாத அளவுக்கு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் நிறைந்த கதைகளை, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து வெளியிடும் போக்கு தமிழ் சினிமாவிலும் சூடு பிடித்திருக்கிறது. மணி ரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஆனால், ‘பொன்னியின் செல்வ’னை முந்திக்கொண்டு வெளியாக இருக்கிறது மூன்று பாகங்களாகத் தயாராகிவரும் சி.வி.குமாரின் கொற்றவை. இவருடைய எழுத்து, இயக்கம், தயாரிப்பில் உருவாகிவரும் ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

‘இது கதையல்ல, இரண்டாயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம்பெற்றுள்ள வசனம், எதைக் குறிப்பிடுகிறது என்று இயக்குநரிடம் கேட்டபோது, “யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் கதாநாயகி வடிவு, பாண்டியர்கள் வரலாற்றில் மர்மமாகிப்போன புதையல் ஒன்றைத் தேடத் தொடங்குகிறார். அது வெறும் புதையலுக்கான தேடல் மட்டுமே அல்ல. அந்தப் புதையல் வேட்டைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, பாண்டியர்கள் வரலாற்றில் புதைந்துபோன பக்கங்களில் புதையலைவிட சுவாரஸ்யமாக என்ன இருக்கிறது என்பதை சாகசங்கள் நிறைந்த காட்சிகளைக் கொண்ட மூன்று பாக திரைக்கதையில் வெளிப்படும்” என்கிறார்.‘கொற்றவை’ படத்தில் ராஜேஷ் கனகசபை, சந்தனா

SCROLL FOR NEXT