இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு

செய்திப்பிரிவு

* ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாவும் நயன்தாராவும் நடிக்க, கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு மறக்கமுடியாத வில்லி வேடம் ‘படையப்பா’வில் அமைந்ததுபோல இதில் குஷ்புவுக்கு வில்லி வேடம்.

* உயிருக்குப் பயந்து மொத்த கோடம்பாக்கமும் ஒடுங்கிக் கிடக்கும்போது நடிகர் யோகிபாபு, முதல்வர், துணை முதல்வர், முக்கிய கட்சித் தலைவர்கள் எனச் சந்தித்து தனது திருமண வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்துவருகிறார்.

* படப்பிடிப்பில் ‘பேட்டா’ என்ற பெயரில் அன்றாடம் ஊதியம் பெற்று வாழ்பவர்கள் திரைபடத் தொழிலாளர்கள். படப்பிடிப்புகள் இல்லாத நிலையில் அவர்கள் பசியில் வாடாமல் இருக்க நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நன்கொடை கொடுத்துத் தொடங்கி வைக்க, ராதாரவி, ரஜினி, விஜய் சேதுபதி, சிவகுமார் குடும்பம், பார்த்திபன் என உதவிக்கரங்கள் வரிசை கட்டியதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் பெப்சி நிர்வாகிகள். தற்போது நடிகர் சங்கமும் நலிந்த உறுப்பினர்களுக்கு உதவ வேகம் காட்டிவருகிறது.

* கரோனா அச்சம் காரணமாக இயக்குநர் விசுவின் இறுதிச் சடங்கில் குறைந்த எண்ணிக்கையில் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், கே.பாக்யராஜ், மனோபாலா, டி.பி.கஜேந்திரன், ரமேஷ் கண்ணா, லெனின் பாரதி, தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, சுகன்யா, பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT