ரசிகா
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை, பகுத்தறிவின் பக்கம் நின்று திரையில் சாடியவர். தனது துடிப்பான நகைச்சுவையால் பாமர மக்களுக்கு எளிதில் புரியும்படி நடிப்பின் மூலமும் வெளிப்படுத்தியவர்.
அவரது நகைச்சுவைப் புரட்சிக்கு வசனங்கள் எந்த அளவுக்கு அடித்தளமாக இருந்தனவோ அதே போல, அவர் பாடிய பாடல்களும் நிலைத்து நின்றன. இன்றைக்கும்கூட அவர் பாடிய பாடல்களைக் கேட்கும்பொழுது காலத்துக்கேற்ற ஒத்திசைவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கலைவாணரும் மதுரமும் 102 படங்களில் நடித்து இருந்தாலும் 74 படங்களில் மட்டுமே அவர்கள் பாடி இருக்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்து, பாடல் காட்சி இல்லாத 28 திரைப்படங்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்கள் பாடிய 176 பாடல்களும் காலமுறைப்படி வரிசைப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் கலைவாணரின் பயணம் ஒரு மணிமகுடம். இப்படி இந்நூல் சுவாரசியமும் சுவையும் மிக்க தகவல்களைக் கடும் உழைப்புடன் தொகுத்து அளித்திருக்கிறது. அதனால், சினிமா தொடர்புடைய முக்கியமான ஆவண நூல்களில் ஒன்றாகிவிடும் தகுதியை அடைந்துவிடுகிறது.
கலைவாணர் - மதுரம் திரையிசைப் பாடல்கள்
கவிஞர் பொன்.செல்லமுத்து
வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்,
275, மேலத்தெரு, கணபதிநகர்,
நாகர்கோவில் 629 002.
தொடர்புக்கு: 9442077268
விலை ரூ.250.