இந்து டாக்கீஸ்

கலாட்டா கார்னர்

வினுபவித்ரா

தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடிகர், நடிகைகள் முதல் உணவு பரிமாறுபவர் வரை சினிமா என்பது கூட்டுழைப்பு. ஆனால் ஒரு சினிமா என்பது இயக்குநராலேயே முழுமையாக அறியப்படுகிறது.

அரசியல் முதல் சினிமா வரை அனைத்தையும் கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பக்கமான Being Satan-ல் சமீபத்தில் சிக்கியிருக்கிறது பாலிவுட்.

பிரபல இயக்குநர்கள் பலரையும் கிண்டலடித்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். கிண்டலடிக்கப்பட்டவர்களில் நம்மூர் பிரபுதேவாவும் இருக்கிறார். இந்த போஸ்டர்களில் சில நம்ம கோலிவுட் இயக்குநர்கள் சிலருக்கும் பொருந்தக்கூடியவைதான்.

ராகேஷ் ரோஷன்:

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஹிருத்திக் ரோஷனைத் தோளில் தூக்கி சுமப்பவர்

ரோஹித் ஷெட்டி:

புவியீர்ப்பு விசைக்கு எதிராக கார்களை வானத்தில் பறக்க விடும் இயக்குநர்- தூக்கில் தொங்குபவர் சர் ஐசக் நியூட்டன்

பிரபு தேவா:

வெறுமனே தென்னக சினிமாக்களை மசாலா கலந்து பாலிவுட்டில் குப்பையாகக் கொடுப்பவர்.

சாஜித் கான் :

லாஜிக், பொது அறிவு மற்றும் பார்வையாளர் களையும் 2006-லிருந்து சாகடித்துவருபவர்

SCROLL FOR NEXT