நே ரத்தை ம திப்பவர்
தன்னைப் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் எத்தனை முக்கியத்துவம் கொடுத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத கதாநாயகி என்று பெயரெடுத்திருக்கிறார் நயன்தாரா. மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடித்து வந்தாலும் தற்போது தமிழில் மட்டும் ஏழு படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
தான் நடிக்கும் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீடு உள்ளிட்ட எந்த விளம்பர நிகழ்ச்சிக்கும் வரமாட்டார். ஆர்யாவின் அழைப்பை ஏற்று அவருடைய தம்பி சத்யா நடித்த ’அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு வந்ததுதான் நயன்தாரா கடைசியாகக் கலந்துகொண்ட திரை நிகழ்ச்சி. திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் மறுப்பு சொல்லிவரும் இவர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பர்தா அணிந்து ஹைதராபாத் ஷாப்பிங் மால்களுக்கு வருவார் என்கிறார்கள்.
அதேநேரம் சினிமா பார்ட்டிகளுக்கு அழைப்பிருந்தால் ஆஜராகிவிடும் நயன்தாரா உடலை முழுவதுமாக மறைக்கும் வெஸ்டர்ன் ஸ்கர்ட்ஸ்களில் வந்து கலக்குவார். பல சமயங்களில் டிசைனர் ஷிபான் சேலைகளில் மணிக்கட்டுவரை மறைத்திருக்கும் காண்ட்ராஸ்ட் பிளவுஸ்கள் அணிந்துவந்து ” சூப்பர்” என்று பாராட்ட வைப்பார்.
ஸ்கர்ட்ஸ் மற்றும் அணியும் புடவைகளுக்கு ஏற்ப கைக்கடிகாரம் அணிவதில் அலாதிப் பிரியம் கொண்டவர். நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும் நயன்தாராவிடம் 200க்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் இருக்கின்றனவாம்.