மேடை மின்னல்
வரும் டிசம்பரில் தனது 29வது பிறந்த தினத்தை கொண்டாடக் காத்திருக்கும் ஆன்ட்ரியா திரையில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
இவரது குரலையும் தோற்றத்தையும் கொண்டாடும் ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி லைவ் மெல்லிசை நிகழ்ச்சிகளில் தோன்றுவார்.
மேடையில் ஒளிரும் டிஸ்கோ விளக்குகளில் டாலடிக்கும் பளபளக்கும் நவீன ஆடைகள் அணிந்து மேடை நிகழ்ச்சிகளில் மைக் பிடிக்கும் ஆன்ட்ரியாவுக்கு பிடித்தமான ஆடை ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்ஸ்.
முட்டிக்கால் தெரிய ஷார்ட் ஸ்கர்ட்ஸ் அணிவதிலும் அலாதிப் பிரியம் கொண்டவர்.
மேடையில் பாடிக் கொண்டே சிறு சிறு நடன அசைவுகளை சிரமம் இல்லாமல் ஆட இத்தகைய ஆடைகள் வசதியாக இருப்பதாக நம்பும் இவர் வெளிநாடுகளில் பயணிக்கும்போது ஹை ஹீல் லெதர் பூட் அணிவதையும் அகலமான சன் கிளாஸ் அணிவதையும் வசீகரமாகக் கருதுகிறார்.